பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் ஏற்கனவே தங்களது 15 பேர் கொண்ட குழுவை அறிவித்தது.
தொடரை நடத்தும் பாகிஸ்தான் அடியே தனது அணியை வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது 15 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றதன் மூலமாக இந்த ஆண்டு தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றது. முன்னணி வீரர்கள் காயம் மற்றும் மணிக்குள் ஏற்பட்ட சில குளறுபடிகளின் காரணமாக தனது அடியை இதுவரை அறிவிக்காத நிலையில் தற்போது 15 பேர் கொண்ட குழுவை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. இதில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது கணுக்காலில் காயமடைந்த சைம் அயூப் இந்த தொடரில் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபிக்கும் சில பிரச்சனைகளின் காரணமாக இந்த தொடரை தவற விட்டு இருக்கிறார். மேலும் கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பகார் ஜமான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி அனுபவம் மற்றும் திறமை கலந்த வீரர்களை சரிசமமாகக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அணி அறிவிப்பு
முதல் போட்டி வருகிற 19ஆம் தேதி கராச்சியில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், இரண்டாவது போட்டி துபாயில் 23ஆம் தேதி இந்திய அணிக்கு எதிராகவும், மூன்றாவது போட்டி வருகிற 27ஆம் தேதி ராவல் பிண்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் பாகிஸ்தான் அணி விளையாட இருக்கிறது. பாபர் அசாம் முகமது ரஸ்வான் ஃபகார் ஜமான் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் அப்ரிடி, நசீம்சா மற்றும் ஹாரிஸ் ராப் போன்ற வலிமையான பந்துவீச்சாளர்களும் இருப்பதால் இந்தத் தொடரை பாகிஸ்தான் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் என்று கருதலாம்.
இதையும் படிங்க:உள்நாட்டு கிரிக்கெட் ஈஸி இல்லை.. என்னோட அறிவுரையை கேளுங்க.. நான் சொல்றது இதுதான் – இர்பான் பதான் கருத்து
15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி:
முகமது ரிஸ்வான் ( கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா ( துணை கேப்டன்), பாபர் ஆசம், ஃபகர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், குஷ்தில் ஷா, ஃபஹீம் அஷ்ரஃப், தயப் தாஹிர், அப்ரார் அகமது, ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன், உஸ்மான் கான்.






