இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அர்ஸ்தீப் சிங் வந்து வீச்சு மற்றும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கால் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பெற்று தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது.
இன்று ஆஸ்திரேலியா ஹோபர்ட் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்களும் ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் 6, கேப்டன் மார்ஸ் 11 , ஜோஸ் இங்லீஷ் 1ரன் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். அதே சமயத்தில் நான்காவது இடத்தில் வந்த டிம் டேவிட் இந்திய பத்து வீச்சை அடித்து நொறுக்கி ரன் ரேட்டை உயர்த்தினார்.
சிறப்பாக விளையாடிய டிம் டேவிட் அரை சதம் அடித்து 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 74 ரன்கள் எடுத்தார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஸ்டோய்னிஸ் 39 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அர்ஸ்தீப் சிங் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 25, கில் 15, கேப்டன் சூரியகுமார் யாதவ் 24, திலக் வர்மா 29, அக்சர் படேல் 17 என கணிசமான பங்களிப்பை கொடுத்து வெளியேறினார்கள். அதே சமயத்தில் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியில் மிரட்டினார்.
மிகச் சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 23 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் எடுத்தார். கடைசியில் இவருடன் விளையாடிய ஜிதேஷ் சர்மா ஆட்டம் இழக்காமல் 13 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 18.3 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தருக்கு செஞ்சது நியாயமா?.. சூர்யா நீங்க கம்பீரை விட மோசம் – விளாசும் இந்திய ரசிகர்கள்
இந்திய அணியின் உலகக் கோப்பை திட்டத்தில் மூன்றாவது சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருந்து வந்தார். இதன் காரணமாக இரண்டு பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற முடிந்தது. தற்போது அவரது இடத்தில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எனவே தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் விளையாடினால், ஹர்திக் பாண்டியாவுடன் இரண்டு பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. எனவே உலகக்கோப்பை திட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் மாற்றங்களை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.