ரோகித் கம்பீர் துபாய் ஆடுகளத்தை தவறாக கணித்தார்களா?. பாக் அணி பக்காவா இருக்கு.. உதாரணம் காட்டும் பார்த்தீவ் பட்டேல்

0
1224

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி நிர்வாகம் துபாய் ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டதா? என இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ள நிலையில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்தது. அதற்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கு இடையேயும் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டனர்.

ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் என துபாய் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு தகுந்தவாறு இருக்கும் என கணிக்கப்பட்டு அதற்கு தகுந்தவாறு அணியின் தேர்வு நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து நேற்று விலகுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். மேலும் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த நில்லையில் இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் அணியில் கூடுதலாக ஒரு ஸ்பின்னரை சேர்த்தது தவறு என அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி தவறாக கணித்ததா?

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் அதிகமாக ஒரு ஸ்பின்னர் இருக்கிறார் என்பதே எனது கருத்தாகும். அந்த அணியில் கூடுதலாக இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருந்திருந்தால் அது அணியை சமநிலைப்படுத்தி இருக்கும். துபாய் ஆடுகளம் சார்ஜாவில் உள்ள ஆடுகளத்தை விட அதன் மேற்பரப்பு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவக்கூடியது.

இதையும் படிங்க:ரொம்ப மோசமா பேசாதீங்க.. நீங்க பண்ணது தப்பு.. இந்திய தொடர் குறித்து டக்கட் பேசியதற்கு கெவின் பீட்டர்சன் விமர்சனம்

மேலும் இங்குள்ள வேகப்பந்து வேச்சாளர்கள் இங்கு விளையாடி நல்ல வெற்றிகளை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் பாகிஸ்தான் அணி தங்களது அணியில் அதிக வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. இருப்பினும் அவர்கள் இங்கே ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள்” என்று கூறி இருக்கிறார். பாகிஸ்தான் அணி குறிப்பாக இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கிலேயே அதிக அளவு வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்துள்ளதா? என்ற சந்தேகமும் நிலவுகிறது.

- Advertisement -