முதல்ல அந்த காரணத்துக்காக அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்பே தரக்கூடாது.. ஆனா அதை தாண்டி பண்ணிட்டாரு – ஸ்ரீகாந்த் பாராட்டு

0
0

​தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 மேட்ச்சில் அபிஷேக் சர்மா காட்டிய அதிரடி பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் பாராட்டி பேசி இருக்கிறார்.

​சமீபத்தில் நடந்த போட்டிகளில் இந்திய அணியின் இளம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா ஃபார்ம் இல்லாமல் தொடர்ச்சியாக குறைந்த ரன்களில் அவுட் ஆகி வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

- Advertisement -

​இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் மேட்ச்சில் அபாரமாக ஆடிய அவர் 32 பால்களில் 82 ரன்கள் குவித்து டீம் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

​இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது “சமீபத்திய ஃபார்ம் அடிப்படையில் பார்த்தால் அபிஷேக் சர்மா இந்த மேட்ச்சில் விளையாடி இருக்கக் கூடாது” என்று கூறினார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த் “ஆனால் அவர் ஆப்கானிஸ்தான் பௌலிங்கை அற்புதமாக எதிர்கொண்டு ரன்கள் குவித்து விட்டார், பழைய 6 இன்னிங்ஸ்களை மறந்துவிட்டு அனைவரும் இந்த 82 ரன்களை மட்டுமே நினைவில் கொள்வார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -