வெறும் 119 ரன்.. மேஜிக் காட்டிய இந்திய பவுலர்கள்.. கண்ணீர் விட்ட பாக் வீரர்.. இந்தியா அசத்தல் வெற்றி

0
1206
Bumrah

இன்று டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் பும்ராவின் அசத்தல் பந்துவீச்சில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி பந்து வீசுவது என முடிவு செய்து அறிவித்தது. துவக்க ஆட்டக்காரர்களாக வந்த விராட் கோலி 3 பந்தில் 4 ரன், ரோகித் சர்மா 12 பந்தில் 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து நான்காவது இடத்தில் அனுப்பப்பட்ட அக்சர் படேல் 18 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்திய அணி ஒரு கட்டத்தில் 89 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் மட்டும் இழந்திருந்தது. அங்கிருந்து 30 ரன்கள் மட்டும் எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 31 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுப் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 10 பந்தில் 13 ரன், உஸ்மான் கான் 15 பந்தில் 13 ரன், பகார் ஜமான் 8 பந்தில் 13 ரன், முகமது ரிஸ்வான் 44 பந்தில் 31 ரன், சதாப் கான் 7 பந்தில் நான்கு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு கடைசி மூன்று ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது கைவசம் ஐந்து விக்கெட் இருந்தது. இந்த இடத்தில் இருந்து மூன்று ஓவர்களுக்கு இந்திய அணி 23 ரன்கள் மட்டுமே கொடுத்தது. பும்ரா, சிராஜ், அர்ஸ்தீப் மூவரும் கடைசி மூன்று ஓவரில் அசத்தினார்கள். பாகிஸ்தான் ஏழு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் அசாதாரண வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : 89/3 டு 119/10.. இந்திய அணியின் பேட்டிங் சரிவுக்கு முக்கிய காரணம்.. டிராவிட் திருத்துவாரா?

இந்திய பந்துவீச்சில் பும்ரா நான்கு ஓவர்கள் பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களுக்கு 24 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இந்த தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்றுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இந்த போட்டியின் முடிவுக்கு பின் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நசிம் ஷா தோல்வியை தாங்க முடியாமல் களத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.