89/3 டு 119/10.. இந்திய அணியின் பேட்டிங் சரிவுக்கு முக்கிய காரணம்.. டிராவிட் திருத்துவாரா?

0
386
T20iwc2024

நடப்பு ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சிறப்பாக ஆரம்பித்த இந்திய அணி தனது தவறான அணுகுமுறையால் சிக்கியது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி இருவரும் வந்தார்கள். ஷாகின் அப்ரிடி ஓவரில் ரோகித் சர்மா எட்டு ரன்கள் எடுத்து சிறப்பாக ஆரம்பித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து நஷிம் ஷா வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி பௌண்டரி அடித்து ஆரம்பித்து அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார். தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் தடுமாறி விளையாடி மூன்று கேட்ச் கொடுத்தார். ஆனால் பாகிஸ்தான் வீரர்களால் அதை பிடிக்க முடியவில்லை. ரோகித் சர்மா அடுத்து 12 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து நான்காவது இடத்தில் அனுப்பப்பட்ட அக்சர் படேல் சமாளித்து விளையாடி 18 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 89 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மீண்டும் வந்து நல்ல நிலைமையில் இருந்தது. 160 ரன்கள் அடிக்கக்கூடிய நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் 7, சிவம் துபே 3, ரிஷப் பண்ட் 42, ரவீந்திர ஜடேஜா 0, ஹர்திக் பாண்டியா 7, பும்ரா 0, சிராஜ் 7*, அர்ஸ்தீப் 9 ரன்கள் எடுக்க, பிரியாணி 19 ஓவர்களில் 119 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுப் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய அணி 29 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து சுருண்டது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா பாக் போட்டி.. ரோகித் பேட்டிங்கில் செய்த செம்ம சேஞ்ச்.. இனி அடக்கறது கஷ்டம்

இந்த போட்டியில் இந்திய அணியின் இந்த மோசமான பேட்டிங் செயல்பாட்டுக்கு காரணம் ஆடுகளத்தின் தன்மை குறித்து கவலைப்படாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்ததுதான். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவில் ஆரம்பித்து கடைசிவரை அப்படியே விளையாடி, பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில் சுருண்டு விட்டார்கள். ஆடுகளத்தை மதித்திருந்தால் நிச்சயம் இந்திய அணி 150 ரன்கள் எடுத்திருக்கும்.