தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றி அசத்தியது.
நான்கு போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டியையும் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு போட்டியையும் வென்றிருந்தது.இந்த நிலையில் இன்றைய போட்டியை வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்கின்ற நிலையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தைரியமாகப் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை மைதானம் எங்கும் சிதறடித்தார்கள். இந்த ஜோடியில் சஞ்சு சாம்சன் முதலில் 51 பந்துகளில் சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து திலக் வர்மா 41 பந்தில் சதம் அடித்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காத இந்த ஜோடி 86 பந்துகளில் அதிரடியாக 210 ரன்கள் குவித்தது.
சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 47 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. ஒரு வருடத்தில் மூன்று சர்வதேச டி20 சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற வகையில் சஞ்சு சாம்சன் உலகச் சாதனை படைத்தார். மேலும் இந்த ஜோடி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக சாதனை படைத்தது.
இதற்கடுத்து மெகா இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 10 ரன்களில் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணிக்கு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 29 பந்துகளில் 43 ரன்கள், டேவிட் மில்லர் 27 பந்தில் 36 ரன்கள், மார்க்கோ யான்சென் ஆட்டம் இழக்காமல் 12 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : 283 ரன்.. சாம்சன் 2 உச்ச உலக சாதனை.. சூர்யா ரெக்கார்டை உடைத்த திலக்.. வரலாற்றை மாற்றிய ஜோடி
தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அர்ஸ்தீப் சிங் 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இதைத்தொடர்ந்து இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணி இந்த ஆண்டு 26 டி20 போட்டிகள் விளையாடி 24 போட்டிகளை வென்று இருக்கிறது. சூரியகுமார் தலைமையில் ஒரு தொடரையும் இழக்கவில்லை.