283 ரன்.. சாம்சன் 2 உச்ச உலக சாதனை.. சூர்யா ரெக்கார்டை உடைத்த திலக்.. வரலாற்றை மாற்றிய ஜோடி

0
2362

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் தென்னாபிரிக்க அணிக்கு பெரிய இலக்கை இந்திய அணி நிர்ணயித்திருக்கிறது.

திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை உடைத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்தியா தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்று இருந்த நிலையில் இன்று கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 18 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 36 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேற, அதற்குப் பிறகு திலக் வர்மாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.

இந்த இருவர் கூட்டணி தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இரண்டு டக் அவுட்டுகளுக்குப் பிறகு தனது அரை சதத்தை பதிவு செய்த சஞ்சு சாம்சன் அதற்குப் பிறகும் தனது அதிரடியான ஆட்டத்தினை தொடர்ந்தார். இறுதியாக 56 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் ஆறு பவுண்டரி மற்றும் ஒன்பது சிக்ஸர்கள் என 109 ரன்கள் குவித்தார்.இதன் மூலமாக சஞ்சு சாம்சன் டி20 வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் டி20 வரலாற்றில் 3 சதங்கள் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

- Advertisement -

சாதனை படைத்த இந்திய ஜோடி

மறுபுறத்தில் இதே அதிரடி ஆட்டத்தை எதிர்கொண்ட திலக் வர்மா 41 பந்துகளில் சதம் அடித்து இதற்கு முன்னர் 45 பந்துகளில் சதம் அடித்த இந்தியா கேப்டன் சூரியகுமார் யாதவின் சாதனையை முறியடித்திருக்கிறார். திலக் வர்மா 9 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. இது இந்திய அணிக்கு இரண்டாவது அதிகபட்ச ரன்களாகவும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிகபட்ச ரன்களாகவும் அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க:பிசிசிஐ மட்டும் இதை செஞ்சா.. ஐசிசிக்கு தைரியமே இல்லை ஜீரோனு சொல்வேன் – பாக் பாசித் அலி விமர்சனம்

திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 86 பந்துகளில் 210 ரன்கள் குவித்திருக்கிறது. இது இரண்டாவது விக்கெட்டுக்கு இந்திய அணித் தரப்பில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாக அமைந்துள்ளது. மேலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாகவும், டி20 ஃபார்மெட்டில் இரண்டாவது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆகவும் அமைந்திருக்கிறது. மேலும் இந்தப் போட்டியில் 23 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாவும் இது அமைந்துள்ளது.

- Advertisement -