இந்திய கிரிக்கெட்

238 ரன்.. உலக கோப்பைக்கு ஸ்பெஷல் பிளான்.. இந்திய அணியின் முதல் வெற்றி.. நியூசிலாந்து பரிதாப தோல்வி

இன்று இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 10, இஷான் கிஷான் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 35 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் உடன் 84 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி சிறப்பான பினிஷிங்

இதற்கு அடுத்து பேட்டிங் வரிசையில் நான்காவதாக வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்த முறை கொஞ்சம் தாக்குப் பிடித்து விளையாடி 22 பந்துகளில் 32, ரன்கள் ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 20 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 44 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குறித்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டப்பி மற்றும் ஜேமிஷன் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இந்திய அணி அபார வெற்றி

இதை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் நான்காவது இடத்தில் வந்த கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து சாப்மேன் 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : வெறும் 35 பந்து.. குரு யுவராஜ் சிங்கை தாண்டி சிஷ்யன் அபிஷேக் ஷர்மா மெகா சாதனை.. நாக்பூரில் வானவேடிக்கை

இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வருண் சக்கரவர்த்தி மற்றும் சிவம் துபே இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் இந்திய அணி நிர்வாகம் டி20 உலக கோப்பையில் களம் இறக்கும் லெவனை இன்று இறக்கி பரிசோதித்தது. அது சிறப்பான முறையில் பலன் கொடுத்து இருக்கிறது.

- Advertisement -
Published by