தற்போது நாக்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தனது குருவான யுவராஜ் சிங்கை தாண்டி சிஷ்யன் அபிஷேக் ஷர்மா சாதனை படைத்திருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சார்பாக மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் களம் இறங்கினார்கள்.
சிக்ஸர் மழை
ஒருமுனையில் சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 10 ரன், 785 நாட்கள் கழித்து இந்திய அணிக்கு விளையாட வந்த இஷான் கிஷான் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து அபிஷேக் ஷர்மா உடன் கேப்டன் சூரியகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.
ஒரு முனையில் அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா பவுண்டரிகளை விட சிக்ஸர்கள் அடிப்பதில் மிரட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் வெறும் 22 பந்தில் தனது ஏழாவது சர்வதேச டி20 கிரிக்கெட் அரை சதத்தை அடித்து மிரட்டினார். சூரியகுமார் யாதவ் 22 பந்தில் 32 ரன், ஹர்திக் பாண்டியா 16 பந்தில் 25 ரன், சிவம் துபே 4 பந்தில் 9 ரன், அக்சர் படேல் 5 பந்தில் 5 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
அபிஷேக் ஷர்மா சாதனை
அபிஷேக் ஷர்மா அரை சதத்தை தாண்டி 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடலன் 84 ரன்கள் எடுத்து சதம் அடிக்க முடியாமல் வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் 200 ஸ்டைரைக் ரேட்டில் ல் அதிக அரைசதங்கள் அடித்த பட்டியலில் யுவராஜ் சிங்கை தாண்டினார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 20 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க : நியூசி முதல் டி20.. உலகக்கோப்பை அணியை இறக்கிய கம்பீர்.. சவால் விட்ட சூரியகுமார் – இந்திய அணி வெல்லுமா?
டி201ல் இந்தியாவுக்காக அதிக முறை 50+ ஸ்கோர்கள் (200+ SR)
10 முறை – சூர்யகுமார் யாதவ்.
6 முறை – அபிஷேக் சர்மா*
5 முறை – யுவராஜ் சிங்
4 முறை – ரோஹித் சர்மா
4 முறை – கே.எல். ராகுல்
3 முறை – ஹார்டிக் பாண்ட்யா
3 முறை – யஷஸ்வி ஜெய்ஸ்வால்






