400வது வெற்றி.. இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை.. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி வெற்றி

0
1227
Ashwin

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என பிரம்மாண்டமான முறையில் கைப்பற்றி இருக்கிறது. தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்று விளையாடிய இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் 218 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 5 மற்றும் நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா 103, சுப்மன் கில் 110, படிக்கல் 65, ஜெய்ஸ்வால் 57, சர்ப்ராஸ் கான் 56 ரன்கள் எடுக்க, இந்திய அணி மொத்தம் 477 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட் கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு விக்கெட் வீழ்த்தியதின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேத பந்துவீச்சாளர் என்கின்ற பெரிய சாதனைக்கு சொந்தக்காரரானார்.

இதற்கு அடுத்து 255 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பெரிய சரிவை உண்டாக்கினார். ஜாக் கிரவுலி 0, பென் டக்கெட் 2, ஒல்லி போப் 19, பென் ஸ்டோக்ஸ் 2, பென் போக்ஸ் 8 ரன்கள் என வெளியேற்றி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு நடுவில் ஜானி பேர்ஸ்டோ 39 ரன்னில் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். அடுத்து வந்த பும்ரா ஒரே ஓவரில் டாம் ஹார்ட்லி 20 மற்றும் மார்க் வுட் 0 இருவர் விக்கெட்டையும் கைப்பற்றினார். அடுத்து ஜோ ரூட் பத்தாதாக வந்த சோயப் பஷீரை வைத்துக்கொண்டு அதிரடியாக விளையாடினார்.

இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா வந்து பிரித்தார். 13 ரன்கள் எடுத்திருந்த சோயப் பஷீர் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதற்கு அடுத்து ஜோ ரூட் விக்கெட்டை 84 ரன்களில் குல்தீப் யாதவ் வீழ்த்த, இங்கிலாந்து அணி 195 ரன்களில் மீண்டும் சுருண்டது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது. இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : மேட் ஹென்றி புது சாதனை.. ஆஸிக்கு நியூசிலாந்து பதிலடி.. ரச்சின் ரவீந்திரா லாதம் நம்பிக்கை

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முதல் போட்டியை தோற்று அடுத்த நான்கு போட்டிகளையும் வென்று இந்தியா கைப்பற்றி இருப்பது, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை. மேலும் இந்திய மண்ணில் இந்திய அணி 400 ஆவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.