இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில் முகமது சிராஜின் அசத்தலான பந்துவீச்சில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கிறது.
நேற்று நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்தது. போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி போட்டியை சீக்கிரத்திலேயே முடித்துக்கொண்டது சர்ச்சையாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே ஜெனி ஓவர்டன் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். இதனால் இங்கிலாந்து வேலை எளிதாக வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்ப்பு உருவானது.
இந்த நிலையில் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே ஜேமி ஸ்மித்தை 2 ரன்களில் வெளியேற்றினார். இதற்கு அடுத்து உடனுக்கு உடனே ஜேமி ஓவர்டன்னை 9 ரன்களில் அனுப்பி வைத்தார். இதனால் இந்திய அணியின் வெற்றி நம்பிக்கை அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து வந்த ஜோஸ் டாங்கை பிரசித் கிருஷ்ணா ரன் ஏதும் இல்லாமல் வீழ்த்தினார். இதை அடுத்து தோள்பட்டையில் காயமடைந்த கிறிஸ் வோக்ஸ் சூழ்நிலையின் காரணமாக விளையாட வேண்டாம். அவரை வைத்துக் கொண்டு கஸ் அட்கின்சன் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவை என்கின்ற சூழ்நிலைக்கு ஆட்டத்தை நகர்த்தி வந்தார். இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது.
இதையும் படிங்க : கம்பீர் செஞ்ச அது குற்றம்.. அது கொடூரமான தப்பு.. கடைசியா சிராஜும் உடைந்து போவார் – சித்து கோபம்
இந்த நிலையில் பந்து வீச்சுக்கு வந்த முகமது சிராஜ் சிறப்பாக விளையாடிய கஸ் அட்கின்சனை கிளீன் போல்ட் ஆக்க பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் ஐந்து விக்கட்டுகள் பிரசித் கிருஷ்ணா நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இத்துடன் இரண்டு போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 2-2 என சமன் செய்தது. கடந்த முறை இல்லாமல் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்ற காரணத்தினால், இந்திய அணியின் கைவசமே இந்த கோப்பையும் ஒப்படைக்கப்படுகிறது!