இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப்பை விளையாட தேர்வு செய்தது குற்றம் மற்றும் கொடூரமான தவறு என நவஜோத் சிங் சித்து காட்டமான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியை மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் உடன் மட்டுமே விளையாடி வருகிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்களை சுழற்றி பயன்படுத்துவதில் பெரிய பிரச்சனை உண்டாகி இருக்கிறது. மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை தோற்பதற்கும் காரணமாக அமைகிறது.
கொடூரமான தவறு
இது குறித்து நவ்ஜோத் சிங் சித்து பேசும்பொழுது ” ஆங்கில வர்ணனையில் ஆகாஷ் தீப் ஊசி போட்டுக் கொண்டிருக்கிறார் இல்லையா? என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் பிட்டாக இருக்கும் அர்ஸ் தீப் இருக்கும் பொழுது காயமடைந்த ஆகாஷ் தீப் எதற்காக விளையாட வைக்கப்பட வேண்டும்? இந்த முடிவை யார் எடுத்திருந்தாலும் அது பெரிய குற்றம் மற்றும் கொடூரமான தவறு. மேலும் இதன் காரணமாக உங்களிடம் இருக்கும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தயக்குதிரையாக இருப்பதற்கு பதிலாக வேலைக்காரர்களாக மாறுகிறார்கள்”
” மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் பந்துவீச்சில் தொடர்ந்து இந்திய அணி நிர்வாகம் சமரசம் செய்து கொண்டு வருகிறது. ஆகாஷ் வெற்றியடைந்தவர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் காயமடைந்தவரை வைத்து விளையாடுவது தவறு. அவருக்கு இடுப்பு பகுதியில் உள்ள காயத்தால் குனியவே முடியவில்லை. அவர் பந்தை தடுப்பதற்கு கால்பந்து விளையாடுகிறார்”
சிராஜையும் உடைத்து விடுவோம்
“இப்படி காயமடைந்தவரை தேர்ந்தெடுத்த காரணத்தினால் சிறப்பாக பந்து வீசி வரும் சிராஜுக்கு வேலைப் பளு அதிகமாகி, அவரையும் நாம் உடைத்து விடுவோம். இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றார்கள். அதில் ஒருவர் காயமடைந்த பொழுதும் தரமான மூன்று பேர் இருக்கிறார்கள். தற்போது இந்திய அணிகள் மூன்று பேர் இல்லை இரண்டரை பேர்தான் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : சிராஜ் இப்படிப்பட்ட ஆள்தான்.. எங்க டீம்ல கூட இப்படி ஒருத்தர் வேணும்.. அதெல்லாம் பொய் கோபம் – ஜோ ரூட் பாராட்டு
“நியாயமாக பார்த்தால் இது ஆகாசின் தவறு கிடையாது. அவர் ஐபிஎல் தொடரின் போது கூட காயம் அடைந்தார் பின்பு திரும்பி வந்து விளையாடினார். அவர் தற்போது எளிதாக காயம் அடையக் கூடியவராக மாறியிருக்கிறார். மேலும் இந்திய அணி 13 பேரை பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் வந்து கொண்டே இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






