435-5.. 304 ரன் வித்தியாசம்.. ஸ்மிருதி மந்தனா மெகா சாதனைகள்.. அயர்லாந்து படுதோல்வி.. இந்திய பெண்கள் அணி அபார வெற்றி

0
1379
Mandhana

இந்திய பெண்கள் அணி அயர்லாந்து பெண்கள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் குவித்து 304 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பல சாதனைகள் படைத்திருக்கிறது.

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி சாதனை வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

மிரட்டிய இந்திய பெண்கள் அணி துவக்க ஜோடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய இந்திய தொடக்க ஜோடி வெறும் 26.4 ஓவரில் 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டியது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 70 பந்துகளில் சதம் அடித்து, இறுதியாக 80 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து இன்னொரு தொடக்க வீராங்கனையான பிரட்டிகா ராவல் 129 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 154 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து வந்த ரிச்சா கோஸ் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய பெண்கள் அணி 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் பிரிண்டர்கஸ்ட் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்திய அணி சாதனை வெற்றி

இதற்கு அடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 31.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு பந்துவீச்சில் தீப்தி சர்மா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த போட்டியில் 70 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார். மேலும் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீராங்கனை ஆகவும், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீராங்கனை ஆகவும் சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : 6 போட்டி 664 ரன்.. கருண் நாயர் டாட்டூ போடல.. காஸ்ட்லி உடை அணியல.. அதான் செலக்ட் பண்ணலயா? – ஹர்பஜன் சிங் கேள்வி

மேலும் இந்த போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் குவித்ததின் மூலம், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிகபட்ச ரன் ஆகவும் இது பதிவாகியது. மேலும் 300க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனி சாதனையும் படைத்தது. ஒட்டு மொத்தத்தில் இந்த வெற்றியை இந்திய பெண்கள் அணிக்கு சாதனை வெற்றியாக பதிவாகி இருக்கிறது!

- Advertisement -