சூப்பர் ஓவரில் ஆஸியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. பரபரப்பான ஆட்டத்தில் நடந்தது என்ன?

0
1387

மகளிர் கிரிக்கெட் டி20 வரலாற்றிலேயே ஒரு சிறந்த போட்டி நேற்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட  தொடரில் பங்கேற்க , ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த  நிலையில், 2வது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பனிப்பொழிவு காரணமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை ஹெலி 25 ரன்கள் எடுத்த போது தீப்தி சர்மா பந்தில் தேவிகாவிடம் கேட்ச் ஆனார்.

- Advertisement -

ஆனால் அதன் பிறகு இந்திய வீராங்கனைகளுக்கு விக்கெட் ஏதும் விழவில்லை. அந்த அளவிற்கு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினர். பெத் மூனி 54 பந்துகளில் 82 ரன்கள் குவிக்க,மறுமுனையில் அதிரடி காட்டிய தஹிலா மெக்ராத் 51 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள்  என்ற கடின இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தனா, செஃபாலி வர்மா முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்தது.

அப்போது செஃபாலி வர்மா 34 ரன்களிலும், ரோட்ரிகியூஸ் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார் . எனினும் மறுமுனையில் அதிரடியை காட்டிய ஸ்மிருதி மந்தனா 49 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 4 இமாலய சிக்சர்களும் அடங்கும்.  கடைசி 12 பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட போது,  19வது ஓவரில் இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து  4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து, கடைசி 6 பந்தில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய வீராங்கனைகள் நெருக்கடியை சமாளித்து, கடைசி பந்தில் பவுண்டரி அடித்தது. இதனால் போட்டி டையானது.  இதனையடுத்து  சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா ஸ்மிருதி மந்தானாவின் அதிரடியால் 20 ரன்கள் குவித்தது. இதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி,16 ரன்கள் வரை அடித்து தோல்வியை தழுவியது.

- Advertisement -