இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை ஐந்து போட்டிகளிலும் ரன் எடுக்க விடமாட்டோம் என்று நம்புவதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஸ் கூறியிருக்கிறார்.
தற்போது விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சுமாராகவே இருக்கிறது. இருந்தபோதிலும் ஆஸ்திரேலியாவில் அவர் ஏற்கனவே விளையாடி இருக்கும் விதத்தில், அவரை இந்தத் தொடரின் மிக முக்கியமான பேட்ஸ்மேனாக பார்க்கிறார்கள். ஆஸ்திரேலியா அணி விராட் கோலியின் மீது முழு கவனத்தையும் வைத்திருக்கிறது.
இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்து தற்போது வரையில் ஆஸ்திரேலியா மீடியாக்கள் தினமும் விராட் கோலி பற்றிய கவர் ஸ்டோரியை வெளியிட்டு வருகின்றன. ஆஸ்திரேலியா வீரர்களுக்கு அப்படி எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் விராட் கோலிக்கு தனியாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் வரவேற்பையும் மரியாதையையும் கொடுக்கின்றன.
விராட் கோலிக்கு இதுவே கடைசி ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணமாக இருக்கலாம். மேலும் அவர் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா மீடியாக்கள் மரியாதை செலுத்துவதாக கூறப்படுகிறது.
விராட் கோலி குறித்து மிட்சல் மார்ஸ் பேசும்பொழுது ” கால்பந்து வீரர் ஹார்லி ரீட் ஆஸ்திரேலியா பத்திரிகைகளில் எப்படி இடம் பெறுவாரோ அந்த அளவிற்கு விராட் கோலி ஆஸ்திரேலிய பத்திரிகைகளின் பின்பக்கத்தில் இடம் பெற்று வருகிறார். செய்தித்தாள்களில் தொடர்ந்து பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால்இதுவரை விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி சிறந்த வீரர். நீங்கள் சிறந்த விஷயங்களை விளையாட்டில் செய்யாமல் சிறந்தவராக மாறிவிட முடியாது”
இதையும் படிங்க : ஆஸி முதல் டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 3 திட்டங்கள்.. கம்பீர் எந்த பக்கம் செல்வார்?
“நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். ஆனால் இந்த தொடர் முழுக்க அவரை ரன்கள் எடுக்க விடமாட்டோம் என்று நம்புகிறோம். மேலும் எங்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதையும் உணர்வோம். மேலும் விராட் கோலி இப்படி செய்வதை நாங்கள் மதிக்கிறோம். இவ்வளவு சிறந்த வீரருக்கு எதிராக விளையாடுவது சிறப்பான ஒரு சவாலாக எங்களுக்கு இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.