“இந்தியா நியூசிலாந்தை சந்திக்க நிச்சயம் பதட்டத்தில்தான் இருக்கும்!” – ராஸ் டெய்லர் சவால் பேச்சு!

0
1490
Taylor

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்று நாளை மறுநாள் ஆரம்பிக்க இருக்கிறது.

முதல் அரையிறுதி போட்டியில் தொடரை நடத்தும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்ற காரணத்தினால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் இருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் கடந்த முறை இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தற்போது போல இந்திய அணியே புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது.

இந்திய அணி வெகு எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் 240 ரன்களை துரத்த முடியாமல் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இது என்றாலும் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில் அப்போது கேன் வில்லியம்சன் உடன் இணைந்து முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்த ஓய்வு பெற்ற நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தற்போது இரு அணிகள் மோதும் அரையிறுதி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது “இந்தியா இந்த நேரத்தில் பெரிய பேவரைட் அணியாக இருக்கிறது. குரூப் கட்டத்தில் மிக நன்றாக விளையாடியது. இழப்பதற்கு எதுவும் இல்லை என்றால் நியூசிலாந்து அணி மிக ஆபத்தான அணியாக இந்தியாவுக்கு இருக்கும். இந்தியா எதிர்த்து விளையாட பதட்டமடையும் ஒரு அணி என்றால் அது நியூசிலாந்து அணியாகத்தான் இருக்க முடியும்.

கடந்த முறை நாங்கள் அரையிறுதியில் இங்கிலாந்தில் இந்திய அணி உடன் விளையாடும் பொழுது சிலர் மட்டுமே எங்களுடைய ஆதரவாளர்களாக இருந்தார்கள். ஆனால் 80 சதவீதம் இந்தியா ஆதரவாளர்கள் இருந்தார்கள்.

அந்த போட்டியில் நாங்கள் முதலில் கொஞ்சம் பின்வாங்க வேண்டி இருந்தது. ஏற்கனவே அங்கு தென் ஆப்பிரிக்கா 300 ரன்கள் அடித்திருந்தது. ஆனால் நாங்கள் மெதுவாக விளையாடினோம். எங்களுக்கு 240 ரன்கள் போதும் என்று தெரிந்தது. அப்போது எங்களை அங்கிருந்தவர்கள் பைத்தியம் என்றார்கள். ஆனால் பின்பு நாங்கள் அதைக் கொண்டு வெற்றி பெற்றோம்.

இறுதிப் போட்டியில் மார்ட்டின் கப்தில் ரன் அவுட்டை எல்லோரும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் நான் மார்ட்டின் கப்தில் நினைவாக மகேந்திர சிங் தோனியை ரன் அவுட் செய்ததை ஞாபகம் வைத்திருக்கிறேன்!” என்று கூறி இருக்கிறார்!