தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் சாய் சுதர்சனை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கிய பிறகு, அவரது மனதில் கேள்விகள் எழத் தொடங்கும் என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் சஞ்ஜய் பங்கர் தெரிவித்துள்ளார்.
சாய் சுதர்சனை நீக்கி, நான்காவது ஸ்பின்னரை ஆட வைத்தது, வாஷிங்டன் சுந்தர் நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்தார்.
சாய் சுதர்சன், தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னதாக இந்தியாவின் கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் 116 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 87 ரன்கள் உட்பட, இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.
இது குறித்து பேசிய சஞ்சய் பங்கர், “ஒரு உத்தி இருந்தால், ஒரு குறிப்பிட்ட வீரரை வளர்க்க விரும்பினால், இந்த விஷயத்தில் சாய் சுதர்சனை, தேர்வுக்குழுத் தலைவர் முதலில் கூறியது போல், இவருக்கு 10 அல்லது 15 போட்டிகள் கொடுக்கலாம். முந்தைய டெஸ்ட் தொடரில் 87 ரன்கள் எடுத்த பிறகு திடீரென அவர் இல்லாதபோது, வீரர் மனதளவில் என்ன உணர்வார் என்று யோசிக்கத் தொடங்குகிறீர்கள்.”
நம்பிக்கை போய்விடும்:
“இது அவரது மனதில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தும். நாங்கள் உன்னை முழுமையாக ஆதரிப்போம் என்று கூறிய பிறகு, திடீரென அந்த வார்த்தைகள் செயல்களால் ஆதரிக்கப்படவில்லை என்றால், நமது இடம் பாதுகாப்பானதா என்று கேள்வி எழுப்பத் தொடங்குவீர்கள்.” என்றார்.
தனது கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், சாய் தனது டெஸ்ட் கேரியரின் தொடக்கத்தில் சிரமப்பட்டார்.
5 போட்டிகளில் இரு அரை சதங்களுடன் 30க்கு மேல் சராசரி கொண்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு நிலையான நம்பர் 3 தேவைப்படுவதால், சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்டில் சாய் சுதர்சனை நீக்கியது இந்திய அணி ஒரு வாய்ப்பை தவறவிட்டது என்று சஞ்ஜய் பங்கர் கூறியுள்ளார்.
வீணடிக்கப்பட்ட வாய்ப்பு:
டெஸ்டில் 3வது இடத்தில் முதல் முறையாக சுந்தர், 38 பந்துகள் தாக்குப்பிடித்து திடமாக தெரிந்தார். முதல் நாள் முடிவில் 6* ரன்களுடன் இருந்தார். “முந்தைய டெஸ்ட் தேர்வுகளில் இருந்து கிடைக்கும் அறிகுறிகளின்படி, எதிர்காலத்துக்கான அணியை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். வெளிநாட்டு டெஸ்ட்களுக்கு, சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட்களை அடித்தளமாக பயன்படுத்தி வீரர்களின் நம்பிக்கையை பலப்படுத்திருக்க வேண்டும்.”
இதையும் படிங்க: பும்ராவுக்கு விக்கெட் எடுக்க அவர் பேரே போதும்.. ப்ளீஸ் தெஆ பவுலர்கள் அவர ஃபாலோ பண்ணுங்க – டேல் ஸ்டெய்ன் பேச்சு
“அதனால்தான் இது ஒரு தவறவிட்ட வாய்ப்பு. இது அணி நிர்வாகத்தின் நீண்டகால சிந்தனை என்றால், அவரது 4 அல்லது 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். கவுகாத்தியில் இந்த காம்பினேசன் ஆடப்படவில்லை என்றால், இந்த கேள்விகள் திரும்ப வரும் “என்று சஞ்சய் பங்கர் கூறினார். இதற்கிடையில், இந்திய அணி முதல் நாளில் சிறப்பாக ஆடி, தென்னாப்பிரிக்காவை 159 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, முதல் நாள் முடிவில் 37/1 என்ற நிலையில் இருந்தது.






