பும்ராவுக்கு விக்கெட் எடுக்க அவர் பேரே போதும்.. ப்ளீஸ் தெஆ பவுலர்கள் அவர ஃபாலோ பண்ணுங்க – டேல் ஸ்டெய்ன் பேச்சு

0
70
Bumrah

பும்ரா டிக்கெட் எடுப்பதற்கு அவர் பந்து வீசும் ஏரியாக்கள் மட்டும் கிடையாது அவருடைய பெயரும் ஒரு காரணமாக இருக்கிறது என லெஜெண்ட் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கூறியிருக்கிறார்.

இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சில் பும்ரா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

அவரது பெயரே அச்சுறுத்தல்

முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து 50 ரன் தாண்டினார்கள். எனவே இந்த டெஸ்ட் போட்டிகள் தென் ஆப்பிரிக்கா கடுமையான சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பும்ரா தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசி, அதில் ஆறாவது மற்றும் ஏழாவது ஓவரில் இரண்டு விக்கெட் கைப்பற்றி இந்திய அணிக்கு வழியைத் திறந்துவிட்டார்.

இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது “பும்ரா 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவார். இது மிகவும் விரைவான வேகம். அவர் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார். மேலும் மேலும் விக்கெட் வீழ்த்த தேடுவார். அதுதான் அவருடைய தேர்ச்சி. அவருடைய பெயரை ஒரு அச்சுறுத்தலை மற்ற அணிக்கு கொண்டு வருகிறது”

- Advertisement -

அவர் செய்ததை செய்யுங்கள்

“எல்லா அணியும் முதலில் அவரை எப்படி விளையாடுவது என்றுதான் ஆலோசனை செய்யும். அவருடைய பந்துவீச்சில் பொறுமையாக செல்லலாம் என்று நினைப்பார்கள். விக்கெட் கைப்பற்றுவதற்கு அவர் எந்த ஏரியாக்களில் பந்து வீசுகிறார் என்பது மட்டும் இல்லாமல் அவருடைய பெயரும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது”

இதையும் படிங்க : 15 சிக்ஸர்.. 11 பவுண்டரி.. 42 பந்தில் வைபவ் சூரியவன்சி ருத்ர தாண்டவ பேட்டிங்.. மெகா சதம்.. எமர்ஜிங் ஆசியா கப் 2025

“இன்று பும்ரா பந்தை நன்கு அடித்து வீசினார். மேலும் அவர் ஆப்-வாலி வீசவில்லை. கொஞ்சம் மேலே ஸ்டெம்பை குறி வைத்து வீசிக்கொண்டே இருந்தார். இதுதான் அவருக்கு விக்கெட் கிடைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அவர் பந்தை வெளியில் வீசவே இல்லை. இங்கு விக்கெட் கைப்பற்றும் என்ன செய்தாரோ அதையே தென் ஆப்பிரிக்க பவுலர்களும் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -