இந்தியா ஜிம்பாப்வே டி20.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல்ல.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. தொடங்கும் நேரம் மற்றும் நாள் விவரம்

0
34547

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது டி20 உலக கோப்பையை வென்ற சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க, அடுத்த கட்ட நகர்வுக்கான வேலையை பிசிசிஐ இப்பொழுதே ஆரம்பித்துள்ளது.

இந்த டி20 உலக கோப்பையை வெற்றி பெற்ற கையோடு இந்திய அணியின் மூத்த சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

- Advertisement -

தற்போது இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இதற்கு இளம் வீரரான சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் ஆன சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட்,ஹர்திக் பாண்டியா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் சாதித்த இளம் வீரர்களான ரியான் பராக், ருத்ராஜ் அபிஷேக் ஷர்மா போன்ற முன்னணி வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த உலகக் கோப்பை தொடரோடு ஓய்வு பெற்ற இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமண் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி மொத்தமாக ஐந்து டி20 போட்டிகள் பங்கேற்க உள்ள நிலையில் இவை அனைத்துமே ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

இதன் முதல் டி20 போட்டி ஜூலை ஆறாம் தேதியான வருகிற சனிக்கிழமையிலும், இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது போட்டி ஜூலை 10ஆம் தேதியும், நான்காவது போட்டி ஜூலை 13, ஐந்தாவது போட்டி ஜூலை 14ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இவை அனைத்துமே இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதன் ஒளிபரப்பு உரிமையை சோனி நெட்வொர்க் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் இதன் அனைத்து போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் இந்த போட்டிகள் மொபைலில் சோனி லைவ் ஆப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே கில் தலைமையில் இந்தியா அண்டர் 19 உலக கோப்பையை வெற்றி பெற்றுள்ள நிலையில், இவருக்கு தற்போது இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் அடுத்த டி20 கேப்டனாக கில் நியமிக்கப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா இருப்பதால் அவருக்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இதையும் படிங்க:ஸ்கிரிப்ட் இல்ல உண்மைய சொல்றேன்.. ஜெயிச்சதும் மண்ணை சாப்பிட காரணம் இதுதான்.. ரோகித் சர்மா விளக்கம்

ஜிம்பாப்வே தொடருக்காக பங்கேற்க உள்ள இந்திய அணி முழு விவரம்.

இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), துருவ் ஜூரல் (WK), ஷிவம் துபே, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது , முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.