மீண்டும் மீண்டுமா? கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.. பாகிஸ்தானுக்கு செக் வைத்த ஐசிசி

0
144

2025 ஆசிய கோப்பைக்கான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான முக்கியமான போட்டிக்கு ஆண்டி பைக்ராஃப்ட்டை மீண்டும் நடுவராக ஐசிசி நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பைக்ராஃப்ட் நடுவராக செயல்படுவார்.

இருப்பினும், செப்டம்பர் 14 அன்று துபாயில் நடந்த முந்தைய போட்டியின் போது, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆகா சல்மானை டாஸ் மற்றும் போட்டிக்குப் பின் கைகுலுக்க வேண்டாம் என பைக்ராஃப்ட் கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  தவறாக குற்றம்சாட்டியது. இது கிரிக்கெட்டுக்கு எதிரானது என அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

- Advertisement -

மீண்டும் பைக்கிராப்ட்:

ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் அஃபிஷியல்ஸின் நீண்டகால உறுப்பினரான பைக்ராஃப்ட்,  அவரது செயல்களுக்கு மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கூறியபோது, ICC அவருக்கு முழு ஆதரவு அளித்து, அவர் எந்த மன்னிப்பும் கேட்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தது.

இதனால், PCB-யால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியை திட்டமிட்ட தொடக்க நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் தாமதப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.  இப்போது ஐசிசி, பாகிஸ்தான் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இடையே அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பைக்ராஃப்ட் நடுவராக நியமிக்கப்பட்டு, போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த மோதல் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இதே மைதானத்தில் தான் “கைக்குலுக்காமல் வீரர்கள் சென்ற” சம்பவம் நடந்தது. இதன் விளைவாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆகா சல்மான் போட்டிக்குப் பிந்தைய விருது வழங்கும் நிகழ்ச்சியை வேண்டுமென்றே தவிர்த்தார். இரு அணிகளும் லீக்  போட்டிகளின் மூலம் சூப்பர் ஃபோர்ஸுக்கு தகுதி பெற்ற பிறகு, சூப்பர் ஃபோரில் மீண்டும் மோதுகின்றன.

இரு அணிகளும் கடந்து வந்த பாதை:

இந்திய அணி தோல்வியடையாமல் இந்தப் போட்டிக்கு வருகிறது. அவர்களின் சமீபத்திய வெற்றி ஓமனுக்கு எதிராக அபுதாபியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர். ஏ பிரிவிலிருந்து ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் சூப்பர் ஃபோர்க்கு தகுதி பெற்ற ஒரே அணி இந்தியாவாகும். முன்னதாக  சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி துபாயில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தானை  வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதையும் படிங்க:போனை சுவிட்ச் ஆப் செய்யுங்க.. வெளியே இருக்கும் சத்தத்தை கேட்க வேண்டாம்..” பாக். போட்டி முன்பு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பேச்சு

மறுபுறம், பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனை வீழ்த்தி தகுதி பெற்றது. ஆனால் இந்தியாவிடம் பெரிய தோல்வியை சந்தித்தது. டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான தொடர்ந்து தோல்வியை பெற்று வருகிறது.
இதனால் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்றால் சல்மான் ஆகா, தனது சிறந்த திட்டத்தை வகுக்க வேண்டும். இல்லை என்றால் இந்தியா மீண்டும் வெற்றி பெறும்.

- Advertisement -