வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா பிளேயின் லெவன்

0
4666

இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி சோனி 5, சோனி 1, சோனி 4 ஆகிய தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படுகிறது. சோனி லிவ் ஓடிடி, ஜியோ டிவியிலும்  நேரலையில் பார்க்கலாம். இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக முகமது சமி வெளியேறியிருக்கிறார். அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

வங்கதேச அணியிலும் கேப்டன் தமீம் இக்பால் மற்றும் டஸ்கின் அகமது ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். வங்கதேச அணியை லிட்டன் தாஸ் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக யாரை சேர்ப்பது யாரை விடுவது என்ற குழப்பத்தில் ரோகித் சர்மா இருக்கிறார்.

குறிப்பாக தொடக்க வீரராக கே எல் ராகுல், ஷிகர் தவான் மற்றும் சுப்மான் கில் என ஒரே இடத்திற்கு மூன்று பேர் போட்டி போடுகின்றனர். இதில் ரோகித் சர்மா தவானுக்கு தான் வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று கே எல் ராகுலை நடு வரிசையில் பயன்படுத்த ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளார்.
கே எல் ராகுல் ஏற்கனவே நடு வரிசையில் விளையாடிய அனுபவம் உடையவர். விராட் கோலி எப்போதும் போல் நம்பர் மூன்றாவது இடத்தில் விளையாடுவார். இந்த நிலையில் ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது இடத்தில்  விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ரிஷப் பண்ட் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர்பட்டில் தங்களது இடத்தை பிடித்துக் கொள்வார்கள். வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் மூன்று இடத்திற்கு தீபக்சாகர், சர்துல் தக்கூர், முகமது சிராஜ் ,உம்ரான் மாலிக் ஆகிய நான்கு வீரர்களிடையே போட்டி ஏற்படும். பனிப்பொழிவு இருக்கும் என்பதால் போட்டி 11:30 மணிக்கு தொடங்குகிறது. இதன் காரணமாக டாஸ் வென்றால் முதலில் பந்து வீசுவது கூடுதல் சாதகமாக இருக்கும்.

- Advertisement -