இந்தியா வங்கதேசம் இன்று 2வது ஒருநாள் போட்டி – பிளேயிங் லெவன் என்ன?

0
72

இந்திய, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டாக்காவில் காலை 11:30 மணிக்கு தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தை வென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி களமிறங்குகிறது. ஏற்கனவே ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சூழலில் சிக்கிக் கொண்டுள்ளது.

- Advertisement -

இந்திய அணி பந்துவீச்சு நன்றாக இருந்தாலும், பேட்டிங் பிரச்சினையாக இருக்கிறது. இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, தவான் ,விராட் கோலி ஆகியோர் கடைசி வரை நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே வங்கதேசத்திற்கு நெருக்கடி கொடுக்க முடியும் . இன்று இந்திய அணி வெற்றி பெறுவதும் தோல்வியை தழுவுவதும் டாப் 3 வீரர்கள் மத்தியிலே உள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான  அக்சர்பட்டேல் இன்று உடல் தகுதி எட்டி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்துவீச்சு பொறுத்தவரை உம்ரான்ன் மாலிக் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு இருக்காது என தெரிகிறது. முதல் போட்டியில் அறிமுகமான குல்தீப் சென்கே இன்றைய ஆட்டத்திலும் முன்னுரிமை கொடுக்கப்படும். இதேபோன்று முதல் ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங் பணியை செய்த ராகுல், அதே பொறுப்பை இன்றும் வகிப்பார் என தெரிகிறது. மற்றபடி அணியில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

வங்கதேச அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பிரச்சனை இருக்கிறது. இதனால் அந்த அணியின் வீரர்களும் நெருக்கடியில் தான் இருக்கிறார்கள். வங்கதேசத்தில் தற்போது குளிர் காலம் என்பதால் மாலையில் வெகு விரைவில் பணிப்பொழிவு தொடங்கி விடுகிறது. இதன் காரணமாக கடைசி பத்து ஓவர் வீசும்போது பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சு செய்வது கூடுதல் சாதகத்தை கொடுக்கும்.

- Advertisement -