இன்று சென்னையில் கடைசி ஒருநாள் போட்டி – பிளேயிங் லெவனில் மாற்றம் செய்வாரா ரோகித்?

0
136

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே  இந்திய ஆஸ்திரேலிய அணிகள் போதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் இன்று மதியம் தொடங்குகிறது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த போட்டியை எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

எதற்காக காலை முதலில் சேப்பாக்கம் மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது.  இந்த நிலையில் இரு அணிகளும் ஒரு போட்டிகளை வென்றுள்ளது. இதனால் கடைசி போட்டியை யார் வெல்கிறார்களோ அவர்கள் தொடரை கைப்பற்றுவார்கள் என்ற நெருக்கடியான நிலையில் இரு அணிகளும் உள்ளன.

இந்த தொடரில் ஒரு முறை கூட 200 ரன்கள் என்று ஸ்கோரை தொடவில்லை. பெரிய இலக்கு எட்டப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. குறிப்பாக சூரியகுமார் யாதவ் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களிலும் முதல் பந்தலே ஆட்டம் இழந்து ரசிகர்கள் ஏமாற்றி வருகிறார்.

இதனால் இன்றைய ஆட்டம் அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஸ்டார்க் வீசும் இன்சுவிங் பந்துகளை இந்திய அணி எதிர்கொள்ள தடுமாறுகிறது. இதுவே தோல்விக்கு காரணமாக அமைகிறது. இந்த நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

விசாகப்பட்டினத்தில் யார் விளையாடினார்களோ அவர்களே சென்னை ஒரு நாள் போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. வேண்டுமென்றால் வேகபந்து வீச்சாளர்களில் யாரேனும் ஒருவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஆர்ஸ்திப் சிங் இந்திய அணிக்கு திரும்பலாம். சென்னை ஆடுகளம் எப்போதுமே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தான் இருக்கும்.

ஆஸ்திரேலியா அணியில் ஆடம் சாம்பா, மேக்ஸ்வெல் சுழற் பந்துவீச்சாளராக நெருக்கடி கொடுப்பார்கள். இந்திய அணியில் அக்சர் பட்டேல், ஜடேஜா மற்றும் யாதவ் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இங்கு கடைசியாக நடைபெற்ற நான்கு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய ஆட்டம் மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது.