டெல்லி ஆடுகளத்தால் இந்தியாவுக்கு  ஆபத்து.. பிட்சின் தன்மை என்ன?

0
1604

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டெல்லியில் நடைபெறுகிறது. 36 ஆண்டுகளாக இந்திய அணி இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதே கிடையாது. ஆனால் இந்திய அணி டிரா பெற்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத சூழல் ஏற்படும். நாக்பூரில் ஆடுகளம் பற்றி பேசி ஆஸ்திரேலியா தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

தற்போது அந்த தவறை மீண்டும் செய்ய கூடாது என ஆஸ்திரேலியா வீரர்கள் மௌனம் காத்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் இரண்டு அணிக்குமே சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காரணம் ஆடுகளம் மிகவும் தோய்வாகவும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் பந்து பட்டு பேட்டிற்கு மெதுவாக வரும்.பவுன்சும் இருக்காது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் தங்களுடைய டைமிங்கை மாற்றி விளையாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இது போன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்ப்பது மிகவும் கடினம். இதன் காரணமாக இந்திய அணி வீரர்களுக்கும் சிக்கல்கள் ஏற்படும். புஜாரா நூறாவது டெஸ்ட் போட்டியில் நாளை களமிறங்குகிறார். அவர் முதல் டெஸ்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் தனது 100வது டெஸ்டில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் நல்ல ஃபார்மில் இருந்தாலும் முதல் டெஸ்டில் தேவையில்லாத ஷாட் அடி பெவிலியன் திரும்பினார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று ஆண்டுகளாக அவர் சதம் அடிக்காதது அவருக்கு மைனஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்படுகிறது. இதனால் தனது சொந்த ஊரான டெல்லியில் விராட் கோலி சதம் அடித்து தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கும்ப்ளே இந்த ஆடுகளத்தில் தான் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்களுக்கு இந்த ஆடுகளம் நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்வது சிறந்தது. ஏனென்றால் கடைசி இன்னிங்சில் பேட்டிங் செய்வது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -