இந்திய கிரிக்கெட்

442 ரன்ஸ்.. மத்ரே சூரியவன்சி ஏமாற்றம்.. 9வது இடத்தில் 52 பந்தில் சதம்.. இங்கிலாந்தை புரட்டி எடுத்த இந்திய U19 அணி

தற்போது இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அண்டர் 19 அணி முதல் 50 ஓவர் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 231 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இந்தியா அண்டர் 19 அணி மும்பை மாநில அணி மற்றும் சிஎஸ்கேவுக்கு விளையாடும் ஆயுஸ் மத்ரே தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதே அணியில் இன்னொரு துவக்க ஆட்டக்காரராக ஐபிஎல் தொடரில் 35 பந்தில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்சி இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நட்சத்திரங்கள் ஏமாற்றம்

நேற்று நடைபெற்ற இந்த 50 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அண்டர் 19 அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அண்டர் 19 அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஆயுஸ் மத்ரே 1, வைபவ் சூரியவன்சி 17 ரன்கள் எடுத்து ஏமாற்றம் தந்து வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் இந்திய அணி 91 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து மோசமான நிலைமையில் இருந்தது.

இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வந்த ராகுல் குமார் 60 பந்தில் 73 ரன்கள், ஏழாவதாக வந்த கனிஷ்க் சௌகான் 67 பந்தில் 79 ரன்கள், எட்டாவதாக வந்த ஆர்எஸ்.அம்பரீஷ் 47 பந்தில் 72 ரன்கள் என அதிரடியாக அரை சதம் அடித்து கலக்கினார்கள். இதனால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

- Advertisement -

9வது இடத்தில் ருத்ர தாண்டவம்

இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் அடுத்து 9வதாக வந்த ஹர்வன்ஸ் பன்காலியா ஆட்டம் இழக்காமல் வெறும் 52 பந்துகள் மட்டுமே சந்தித்து 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் சதம் அடித்து 103 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் குவித்தது. கீழ் வரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆச்சரியப்பட வைத்தார்கள்.

இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட்.. வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் XI அறிவிப்பு.. 2 அதிரடி மாற்றம்.. கம்மின்ஸ்க்கு சிக்கல்

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் வில் பெனின்சன் சதம் அடித்து 105 பந்தில் 103 ரன்கள் எடுத்தார். இந்திய அண்டர் 19 அணி 231 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -
Published by

Recent Posts