ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்திருக்கிறது. இதில் எதிர்காலத்திற்கான சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
தற்போது ஆஸ்திரேலியா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் செய்துள்ள மாற்றங்கள்
தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இத்துடன் இந்த அணிக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடும் கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் பிரண்டன் கிங் இருவரும் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்கால வீரராக கருதப்பட்ட அலிக் ஆதனஸ் கழட்டிவிடப்பட்டிருக்கிறார். மேலும் இந்த அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், ஒரு சுழல் பந்து ஆல்ரவுண்டர் மற்றும் ஒரு சுழல் பந்துவீச்சாளர என பவுலிங் யூனிட் அமைக்கப்பட்டிருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்
கிரெய்க் பிராத்வைட்
பிராண்டன் கிங்
ஜான் கேம்ப்பெல்
கீசி கார்டி
ரோஸ்டன் சேஸ் (கே)
ஷாய் ஹோப்
ஜஸ்டின் கிரேவ்ஸ்
அல்சாரி ஜோசப்
ஜோமல் வாரிக்கன்
ஷமர் ஜோசப்
ஜெய்டன் சீல்ஸ்
இதையும் படிங்க : விராட் கிடையாது.. இந்த வீரரை உடனே இந்திய டீம்ல சேர்க்கணும்.. பிரச்சனையே அதுதான் – நாசர் ஹுசைன் கருத்து
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பலமாக அமைக்கப்பட்டிருப்பதும், மேலும் காயம் காரணமாக ஸ்மித் இடம் பெறாததும், ஃபார்ம் இல்லாததால் லபுசேன் கழட்டி விடப்பட்டு இருப்பதாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வந்திருக்கும் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு நெருக்கடியும் அழுத்தவும் அதிகரித்திருக்கிறது.






