இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் உலகக் கோப்பை குவாலிஃபயர் போட்டிகளால் புதிய சிக்கல்.. விபரம் என்ன ?

0
3360

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது .

இந்தப் போட்டிகள் ஜூலை மாதம் 12ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முடிவடைய இருக்கின்றன . இரண்டு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி துவங்க இருக்கிறது . இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு மூன்று ஒரு நாள் போட்டிகளும் அதனைத் தொடர்ந்து ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன .

- Advertisement -

இதற்காக இந்திய அணி வருகின்ற ஜூலை மாதம் இரண்டாம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . நீண்ட பயண தூரமாக இருப்பதாலும் போட்டிக்கு முன்பாக சிறப்பான அளவில் தயாராக இருக்கும் இந்திய அணி 10 நாட்களுக்கு முன்பாக மேற்கிந்திய தீவுகளுக்கு செல்ல இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இந்நிலையில் இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான அட்டவணையை தயாரிப்பதில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது . அந்த அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் விளையாடி வருகிறது . இந்தப் போட்டிகள் ஜூலை ஒன்பதாம் தேதி தான் முடிவடையும் . அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சி இருப்பதால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவு வீரர்கள் எவ்வாறு கலந்து கொள்வார்கள் என்ற சந்தேகம் பரவலாக நிலவி வருகிறது .

மேலும் ஜிம்பாப்வே நாட்டிலிருந்து முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் மேற்கிந்திய தீவுகளின் டோமினிக்கா தீவை அடைய இரண்டு நாட்கள் ஆகும் . இதனால் மேற்கிந்திய தீவுகளுக்காக டெஸ்ட் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் முக்கிய வீரர்களான ஜேசன் ஹோல்டர் அல்சாரி ஜோசப் கைல் மேயர்ஸ் மற்றும் ரோஸ்டன் சேஸ் போன்ற முக்கிய வீரர்கள் முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக இருக்கிறது .

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதற்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் பல்வேறு விதமான அணுகுமுறைகளையும் யோசித்து வருகிறது . இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் க்ரிக்பஸ் இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார் .

அந்தப் பேட்டியில் குறிப்பிட்டு இருக்கும் அவர்” மேற்கிந்திய தீவுகளை பொருத்தவரை உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவது தான் எங்களது முதல் லட்சியம் . மேலும் மேற்கிந்திய தீவுகள் அணி உலக உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டால் உலகக் கோப்பை க்கும் தகுதி பெற்று விடும் . அதன் பிறகு தகுதி சுற்று போட்டிகளின் இறுதிப் போட்டிகளை விளையாடுவது என்பது ஒரு சம்பிரதாயமே . எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை குவாலிஃபயர் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் போட்டிகள் விளையாடக்கூடிய வீரர்கள் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகளின் இறுதிப் போட்டியை விளையாடாமல் டெஸ்ட் போட்டிகளுக்காக நாடு திரும்புவார்கள்” என குறிப்பிட்டு இருக்கிறார்