இந்தியா, அயர்லாந்து தொடருக்கான அட்டவணை வெளியீடு.. ஒரே மாதத்தில் இத்தனை டி20 போட்டியா?

0
2925

இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இது தொடர்பாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 12 மாதங்களில் இந்திய அணி இரண்டாவது முறையாக அயர்லாந்துக்கு வந்து போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்திய அணியின் கிரிக்கெட் அட்டவணை பிசியாக இருக்கும் இந்த தருணத்தில் அயர்லாந்துடன் டி20 போட்டிகளில் விளையாட அனுமதி அளித்த பிசிசிஐக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த முறை இந்திய அணி இங்கே இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியது.

- Advertisement -

இரண்டு போட்டிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது. இதனால் இம்முறை ரசிகர்கள் கொடுத்த பேராதரவு காரணமாக மூன்று டி20 போட்டிகளாக நடத்துகிறோம். இந்தத் தொடர் அயர்லாந்து ரசிகர்கள் மறக்க முடியாத படி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் டி20 போட்டியில் இந்தியா அயர்லாந்து அணிகள் மோதுகிறது. இதன் பிறகு ஆகஸ்ட் 20ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டியும், ஆகஸ்ட் 23ஆம் தேதி மூன்றாவது போட்டியும் நடைபெறுகிறது. கடந்த முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடியது.

ஹர்திக் தலைமையில் இளம் வீரர்களே இந்த பங்கேற்பார்கள் என தெரிகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டார்கள். இதேபோன்று ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்த டி20 தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்திய அணி எட்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் இந்திய அணி 5 போட்டிகள் விளையாடும் நிலையில் அங்கிருந்து நேராக அயர்லாந்து சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

ஆசிய கோப்பை, உலக கோப்பைக்கு என ஒரு அணி தயாராகி வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ், திலக்  வர்மா ,ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.