டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தொடர் தொடங்கும் போது கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்திய அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியை பெற்றது. இதன் காரணமாக அரை இறுதிப் போட்டிகளுக்கு முன்புறம் வாய்ப்பை இந்திய அணி இழந்துவிடுவோமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு இருந்தது. அடுத்து வர இருந்தால் 3 ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அரையிறுதி வாய்ப்பு இருக்கும் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. அதேபோல ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சுத்தமாக ரன்கள் எடுப்பதற்கான வாய்ப்பை வழங்க வில்லை. இதனால் ஸ்காட்லாந்து பேட்டிங் வீரர்கள் அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். ஷமி 3 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வெறும் 86 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய நடத்திய ராகுல் மற்றும் ரோகித் இன்னைக்கு சிறப்பான துவக்கம் கொடுத்தனர். பவர் பிளே முடிவதற்குள்ளாகவே 70 ரன்களை இந்திய அணி குவித்துவிட்டது. கடைசியாக சூரியகுமார் ஒரு சிக்சர் அடித்து ஆட்டத்தை ஏழாவது ஓவரில் முடித்து வைத்தார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் ஆப்கானிஸ்தான் அணியை விட அதிகமாக தற்போது இருக்கிறது.
அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாத இந்திய அணி வரும் போட்டியில் நமீபியா அணியை வெற்றி கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வி பெற வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறாமல் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இது சாத்தியப்படும்.
நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு பிறகு இந்திய அணிக்கு அடுத்த ஆட்டம் இருப்பதால் இந்திய அணி அந்த ஆட்டத்தை எப்படி எதிர்கொள்ளும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.