5-0, டி20களில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா; சேஸிங்கில் புதிய சாதனை படைத்திருக்கும் இந்திய அணி!!

0
36

டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சேஸ் செய்து வென்றதில் இந்திய அணி புதிய சாதனை படைத்திருக்கிறது.

15ஆவது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி, துவக்கம் முதலே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை பந்துவீச்சு மூலம் திணறடித்தது. 19.5 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

பாகிஸ்தான் வீரர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி அதிலும் புதிய சாதனை படைத்தார்கள். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளும், அர்ஷதிப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தன. சற்று சிக்கலான இலக்கை துரத்திய இந்திய அணி இறுதி வரை போராடி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது ஆக இந்திய அணி பேட்டிங் செய்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதுவரை ஐந்து முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து முறையும் வெற்றியை பெற்றிருக்கிறது. டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இப்படி ஒரு சாதனையை யாரும் படைத்ததில்லை. சாதனையின் முழு பட்டியல் பின்வருமாறு:

டி20களில் பாகிஸ்தானுடன் இந்திய அணி சேஸ் செய்த போட்டிகள்:

2012 கொழும்பு – 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

2014 டாக்கா – 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

3. 2016 டாக்கா – 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

4. 2016 கொல்கத்தா – 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

5. 2022 துபாய் – 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இதில் நான்கு முறை மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இந்தியா வென்றுள்ளது. கடைசியாக நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பேற்று வெற்றியை பெற்று தந்திருக்கிறார். மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.