35 பந்தில் ரோகித் அரைசதம்.. 33 பந்தில் இஷான் கிஷன் அரைசதம்! அதிரடி காட்டி டிக்ளேர் செய்த இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வலுவான இலக்கு! – 4ஆம் நாள் ஆட்டத்தின் ரிப்போர்ட்!

0
5881

முதல் இன்னிங்ஸ் முடிவில் 183 ரன்கள் முன்நிலையுடன் அதிரடியாக இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 181 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 364 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் மூன்றாம் நாள் முடிவில் 229 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

நான்காம் நாள் ஆட்டம் துவங்கியதிலிருந்து இந்திய அணியின் ஆதிக்கம் ஓங்கியது. முகமது சிராஜ் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை 255 ரன்கள் சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றினார். இவர் 60 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் இன்னிங்ஸில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

183 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி அதிரடியான அணுகுமுறையில் களமிறங்கியது. இதன் மூலம் விரைவில் ரன் குவித்து டிக்ளேர் செய்ய உள்ளார்கள் என்பது உறுதியாக்கியது.

ரோகித்-ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து புதிய சாதனையும் படைத்தது. மேலும் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதில் ரோகித் சர்மா 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். இவர் 44 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 38 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்து உள்ளே வந்த இஷான் கிஷன் களத்தில் இருந்த கில் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடுங்கள் விரைவில் டிக்ளர் செய்யலாம் என்று வெளியில் இருந்த ரோகித் சர்மா சிக்னல் கொடுத்து அனுப்பினார்.

இதனையடுத்து நிற்காமல் சிக்ஸர் மற்றும் பௌண்டரிகளாக விலாசி வந்த இஷான் கிஷன் 33 பந்துகளில் டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும்

மறுமுனையில் கில் நிதானமாக ஆட்டம் விளையாடி 29 ரன்கள் அடித்திருந்தார். இஷான் கிஷன் அரைசதம் கடந்து அடுத்த இரண்டு ரன்கள் அடித்த உடனேயே வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ரோகித் சர்மா டிக்ளேர் செய்யலாம் வாருங்கள் என்று அழைத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 181 ரன்கள் குவித்தது டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் முன்னிலை உட்பட மொத்தம் 364 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை துரத்துவதற்கு களமிறங்கிய அவர்களது துவக்க ஜோடியில், கேப்டன் க்ரெய்க் பிராத்வெயிட் வெறும் 28 ரன்கள் மட்டுமே அடித்து அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். அடுத்ததாக உள்ளே வந்த கிர்க் மேக்கன்ஸி ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் சூழலில் ஆட்டமிழந்தார்.

நான்காம் நாள் முடிவில் 76 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இவர்கள் வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது