கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

37 பந்துகளில் 68 ரன்கள்.. தனி ஆளாக மிரட்டிய அபிசேக் சர்மா.. மற்ற இந்திய வீரர்கள் ஏமாற்றம்.. ஆஸ்திரேலியாவுக்கு 126 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் அபாரமாக விளையாடியது.

- Advertisement -

இந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த தருணத்தில் மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க வீரர்களாக கில், அபிஷேக் ஷர்மா களம் இறங்கினர். அபிஷேக் ஷர்மா வழக்கம் போல் அதிரடியாக ஆடினாலும், கில் பத்து பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஐந்து ரன்களை மட்டுமே சேர்த்து பெவிலியின் திரும்பினார்.

தடுமாறிய டாப் வரிசை:

இதனை அடுத்து சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரும் நான்கு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். கடந்த போட்டியில் ஃபார்ம்க்கு திரும்பிய கேப்டன் சூரியகுமார் இந்த ஆட்டத்தில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

இந்த தொடரில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய திலக் வர்மா இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு டக் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கிய நிலையில் அக்சர் பட்டேல் களத்திற்கு வந்தார்.
அவர் 7 ரண்களில் மோசமான ரன் அவுட் ஒன்றில் சிக்கினார்.

- Advertisement -

அபிசேக் அதிரடி:

இதனால் இந்திய அணி 49 ரன்னுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த கட்டத்தில் தான் ஆறாவது விக்கெட்டுக்கு அபிஷேக், ஹர்சித்  ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா, 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க: இந்திய டி20 அணியில் வைபவ் சூரியவன்சி.. 8 அணிகள் 10 நாட்கள் நடைபெறும் புதிய தொடர் – வெளியான புதிய தகவல்கள்

ஹர்ஷித் ராணா 33 பந்துகளின் 35 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கீழ் வரிசையில் விளையாடிய சிவம் துபே இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார். குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் டக் ஆக, அணி 18.4 ஓவரில் 125 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஹேசல்வுட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -
Published by

Recent Posts