இந்திய டி20 அணியில் வைபவ் சூரியவன்சி.. 8 அணிகள் 10 நாட்கள் நடைபெறும் புதிய தொடர் – வெளியான புதிய தகவல்கள்

0
142
Suryavanshi

தற்போது 14 வயதில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் இந்திய உள்நாட்டு வீரர் இந்திய டி20 அணியில் விளையாடுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகி இருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது.

ஆசியக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்படும். இந்த முறை தோகாவில் நவம்பர் 14 முதல் நவம்பர் 23ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தீராத சிக்கல்

தற்போது ஆசிரிய கிரிக்கெட் கவுன்சில் சேர்மேனாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் மொஹ்சின் நக்வி இருக்கிறார். இவர் கையால் இந்திய அணி ஆசிய கோப்பை சாம்பியன் டிராபியை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இதன் காரணமாக இவர் இன்னும் கோப்பையை இந்திய அணியிடம் ஒப்படைக்கவில்லை. இந்த சிக்கல் அநேகமாக தீர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் இடம்பெற்ற எட்டு அணிகளும் இந்த தொடரிலும் இடம் பெறும். ஆனால் பெரிய கிரிக்கெட் நாடுகள் தங்களுடைய ஏ அணியை மட்டுமே அனுப்பி வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன் அணிகளும், பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பெறுகின்றன.

- Advertisement -

வைபவ் சூர்யவன்சிக்கு வாய்ப்பு

இதற்கு முன்பாக இந்த தொடர் எமர்ஜிங் ஆசியா கப் என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்த பெயர் மாற்றப்பட்டு ஆசியா கப் ரைசிங் ஸ்டார் சாம்பியன்ஷிப் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கடந்த முறை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஏ அணி ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க : வலியாதான் இருக்கு.. ஆனா இந்தியா கிட்ட நாங்க தோத்தது நல்லது தான்.. இனி இது மாறும் – அலீசா ஹீலி கருத்து

இந்த முறை இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியில் வைபவ் சூரியவன்சி கட்டாயம் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. இதில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் கூடிய விரைவில் நேரடியாக இந்திய அணிக்கு அறிமுகமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -