இந்தியாவ அலறவிட்ட ஆஸி ஃபாஸ்ட் பவுலர நாங்க ஸ்பின்னர் மாதிரி டீல் பண்ணுவோம் – மைக்கேல் வாகன் அசால்ட் கருத்து!

0
274
Vaughan

உலகப் புகழ்பெற்ற ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் ஆரம்பிக்கிறது.

இதற்கு முன்பாக இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணி மிக நம்பிக்கையுடன் இந்தத் தொடரை எதிர்கொள்ளும்.

- Advertisement -

அதே சமயத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில், மெக்கெல்லம் பயிற்சியில் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக ஒரு நாள் கிரிக்கெட் போல விளையாடி இங்கிலாந்து அணி பல வெற்றிகளைச் சமீப காலத்தில் குவித்து வருகிறது.

எனவே பலமான பந்துவீச்சை கொண்டிருக்கிற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி இதே அதிரடியான முறையில் விளையாடுமா? என்று உலகின் பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆசஸ் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இரண்டாவது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை கட்டுப்பாடான வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஸ்காட் போலண்டை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னரை மாதிரி டீல் செய்யும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி அவர் பேசும்பொழுது “இங்கிலாந்து அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருவது அவர்கள் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் அவர்களுக்கு கைக்கொடுத்தது.

ஆனால் இந்த ஆஸ்திரேலியா அணி சற்று வித்தியாசமான அணி. இவர்கள் நல்ல பவுலிங் யூனிட்டை வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கிரீசில் இருந்து இறங்கி, ஸ்காட் போலண்டின் லென்த்தில் விளையாடுவார்கள். அவரை ஒரு ஸ்பின்னர் மாதிரி டீல் செய்வார்கள்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆப்
ஸ்டெம்புக்கு வெளியே கீழே இறங்கி வந்து ஆன்சைட் அடிப்பார்கள். ஏனென்றால் போலந்து பந்தை எந்த இடத்தில் தரை இறக்குவார் என்று அவர்களுக்குத் தெரியும்!” என்று கூறியிருக்கிறார்!