இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 462 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருக்கிறது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 17 ரன்கள் டார்கெட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அணி இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்தரா 137 ரன்கள் எடுக்க 402 ரன்கள் குவித்தது. இந்திய அணி 356 ரன்கள் பின் தங்கியது.
இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் இருவரும் இணைந்து 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்திய அணி நேற்றைய நாளில் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 53 விராட் கோலி 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். சர்பாராஸ் கான் 70 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.
இதைத் தொடர்ந்து இன்று விளையாடிய இந்திய அணிக்கு சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் தன் பங்குக்கு 99 ரன்கள் எடுத்து சதத்தை துரதிஷ்டவசமாக தவற விட்டு வெளியேறினார். இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு கேஎல்.ராகுல் 12, ரவீந்திர ஜடேஜா 5, ரவிச்சந்திரன் அஸ்வின் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து இந்திய அணி 462 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் டார்கெட் கொடுக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, வில்லியம் ரூர்க் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி விளையாட வந்தது. முதல் ஓவரை வீசிய பும்ரா அதில் 4 பந்துகளை வீசிய பொழுது, வெளிச்சம் இல்லை என்று கூறி நடுவர்கள் போட்டியை நிறுத்தி விட்டார்கள். நியூசிலாந்து அணி ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட் ஏதும் இழக்காமல் வெளியேறிவிட்டது. நாளை போட்டி மீண்டும் துவங்கும்.
இதையும் படிங்க : சர்பராஸ் கானுக்கு அந்த வித்தை நல்லா தெரியும்.. அவர் இப்படித்தான் ஆடறார் – அனில் கும்ப்ளே விளக்கம்
இதற்கு முன்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1887 ஆம் வருடம் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 45 ரன்களில் அவுட் ஆகி, அந்த டெஸ்ட் போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்த ஒரு நிகழ்வு மட்டுமே 50 ரன்னுக்குள் ஆல் அவுட் ஆன அணி வெற்றி பெற்ற வரலாறாக இருக்கிறது. தற்பொழுது இந்த 137 வருட வரலாற்றை இந்திய அணி மாற்றுமா? என்று பார்க்க வேண்டும்.