இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் கான் பேட்டிங்கில் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கிறார்? என்பது குறித்து இந்தியனியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே விளக்கம் அளித்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் சர்ப்ராஸ் கான் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமாக விளையாடி, தனது சர்வதேச கிரிக்கெட்டின் முதல் சதத்தை அடித்திருக்கிறார்.
இரண்டு நாளிலும் உறுதியான ஆட்டம்
நேற்றைய நாளில் சர்பராஸ் கான் விராட் கோலி உடன் இணைந்து நூறு ரன்னுக்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய அணிக்கு நம்பிக்கையை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து இன்றைய நாளில் ரிஷப் பண்ட் உடன் இணைந்து மீண்டும் இன்னொரு நூறு ரன்க்கும் மேலான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பெரியதாக மாற்றி 195 பந்துகளில் 18 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 150 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி நெருக்கடியாக இருந்த சமயத்தில் சர்பராஸ் கான் நடித்திருக்கும் இந்த சதம் பல வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
சர்பராஸ் கானுக்கு அந்த வித்தை தெரியும்
இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறும் பொழுது “அவர் களத்தில் இறங்கும் பொழுது அந்த ஆரா மிகவும் சிறப்பாக இருக்கும். அவர் பேட்டிங்கில் பெரிய புத்திசாலி. பவுலர்களுக்கு எப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிற வித்தை அவருக்கு நன்றாகவே தெரியும். மேலும் அவர் ஒரே ஒரு தொடரில்தான் விளையாடியிருக்கிறார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது முதல்முறையாக அழுத்தத்தின் கீழ் வந்தார். சிறந்த ஒரு அணிக்கு எதிராக தனது திறமையை முத்திரை குத்தி இருக்கிறார்”
இதையும் படிங்க : சர்பராஸ் கான் 150 ரன்ஸ்.. மும்பையை வைத்து சஞ்சய் மஞ்சுரேக்கர் பதிவு.. இந்திய ரசிகர்கள் கடும் விமர்சனம்
“அவர் ஸ்கொயரில் விளையாடி பந்துவீச்சாளர்களுக்கு நல்லஅழுத்தத்தை உருவாக்குகிறார். மேலும் கவர் பகுதியில் பவுண்டரிகளை அடிக்கிறார். மேலும் இதற்காக அவர் அதிகம் நகர்வது கிடையாது. பந்தில் லைனுக்கு நின்ற இடத்தில் இருந்து விளையாடுகிறார். மேலும் அவர் எப்படி விளையாட திட்டமிட்டு வருகிறாரோ அதில் மிகச் சரியாக ஒட்டிக் கொள்கிறார்” என்று கூறியிருக்கிறார்