இன்று 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வைபவம் சூரியவன்சி அதிரடியால் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்து இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என்று அறிவித்தது. மேலும் அரை இறுதியில் களம் இறங்கிய அதே அணியை மீண்டும் இந்திய அணி நிர்வாகம் களம் இறக்கி இருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் 11 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டம். தொடர்ந்து வந்த கேப்டன் ஆயுஸ் மாத்ரே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் இன்னொரு முனையில் விளையாடிய வைபவ் சூரிய வம்சி பீஸ்ட் மோடில் வெறித்தனமாக விளையாடினார். 32 பந்தில் அரை சதம் அடித்த அவர் தொடர்ந்து 55 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். ஒட்டுமொத்தமாக 80 பந்துகளை சந்தித்த அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உடன் 175 ரன்கள் குவித்தது வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு மிடில் வரிசையில் இருந்து பெரிய ரன்கள் வரவில்லை. அபிக்கியான் குண்டு 31 பந்தில் 40 ரன்கள், திரிவேதி 36 பந்தில் 32 ரன்கள், வியான் மல்கோத்ரா 36 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்து இருக்கிறது.
இதையும் படிங்க : டி20 உலக கோப்பை இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்.. சூரியகுமார் வருத்தம்.. மாற்று வீரர் யார் வர வாய்ப்பு?
இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்தவராகவும், அண்டர் 19 உலக கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவராகவும், இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவராகவும் வைபவ் சூரியவன்சி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.