இன்று பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்து இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 106 பந்தில் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. ஸ்மருதி மந்தனா 58 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க வீராங்கனை செபாலி வர்மா சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார்.
இதற்கடுத்து ஜெமிமா 24, கேப்டன் ஹர்மன்பிரீத் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஸ் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்த தீப்தி சர்மா 58 பந்தில் 58 ரன் எடுத்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன் எடுத்திருக்கிறது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் இந்திய ஆண்கள் அணியில் தொடக்க விக்கட்டுக்கு 100 ரன் பார்ட்னர்ஷிப் வந்தது கிடையாது. இறுதியாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் சச்சின் சேவாக் ஜோடி கூட 100 ரன் பாட்னர்ஷிப் அமைக்கவில்லை. ஆனால் ஸ்மிருதி மந்தனா செபாலி வர்மா ஜோடி சாதித்திருக்கிறது.
இதையும் படிங்க : நான் திரும்ப, திரும்ப இதை தான் சொல்றேன்.. கம்பீர் மீண்டும் ஒரு தவறு செய்ய கூடாது.. இர்பான் பதான் பாராட்டு
மேலும் ஒரு நாள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரணாகவும் இது பதிவாகி இருக்கிறது. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிகபட்சமாக 167 ரன்கள் சேஸ் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.