இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிரடியில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று கட்டாக் பராபதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக வந்ததில் துணை கேப்டன் கில் சந்தித்த முதல் பந்தில் பவுண்டர் அடித்து இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து அவரும் ஏமாற்றம் அளித்தார்.
அபிஷேக்சர்மாவுக்கு பவர் பிளேவில் பெரிய அளவில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 9 பந்துகளை மட்டுமே சந்திக்க முடிந்தது. அடுத்து அவர் அதிரடியாக விளையாட முயற்சி செய்து 12 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். கொஞ்சம் தாக்குப் பிடித்து விளையாடிய திலக் வர்மா 32 பந்தில் 26 ரன், அக்சர் படேல் 21 பந்தில் 23 ரன், சிவம் துபே 9 பந்தில் 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இந்த முறை பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா எடுத்ததுமே இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார். 25 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். மொத்தம் 28 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 59 ரன்கள் எடுத்தார். இவருடன் ஜிதேஷ் சர்மா ஆட்டம் இழக்காமல் ஐந்து பந்தில் 10 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : தெஆ முதல் டி20.. கம்பீர் எடுத்த சர்ப்ரைஸ் முடிவு.. அஸ்வின் கோரிக்கை ஏற்ப.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி
இதைத்தொடர்ந்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி நெகிடி 3 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா தவிர்த்த இந்திய பேட்ஸ்மேன்கள் மொத்தம் 92 பந்துகளில் 112 ஸ்ட்ரைக் ரேட்டில் 103 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 211 ஸ்டிரைக் ரேட்டில் 58 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.