தெஆ முதல் டி20.. கம்பீர் எடுத்த சர்ப்ரைஸ் முடிவு.. அஸ்வின் கோரிக்கை ஏற்ப.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி

0
545
Surya

இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆச்சரியப்படும் முடிவை எடுத்திருக்கிறார்.

இந்தியா தென் ஆப்பிரிக்க அணிக்கு இடையே 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடரின் முதல் போட்டி இன்று கட்டாக் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது

- Advertisement -

திரும்பி வந்த வீரர்கள்

இந்த போட்டிக்கு இந்திய டி20 அணியின் துணை கேப்டன் கில் காயத்தில் இருந்து மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். மேலும் இன்னொரு முக்கிய வீரர் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறார். இவர் வந்திருப்பது இந்திய பிளேயிங் லெவனை அமைப்பதில் பெரிய சாதகத்தை உருவாக்கி இருக்கிறது.

மேலும் பேட்டிங் யூனிட்டில் பெரிய அளவுக்கு எந்த மாற்றமும் கிடையாது. சஞ்சு சாம்சனுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவருடைய இடத்தில் இரண்டாவது விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா விளையாடுகிறார். மேலும் சிவம் துபேவுக்கு ஆறாவது பவுலராக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

கம்பீர் ஆச்சரிய முடிவு

இந்தப் போட்டிக்கு இரண்டு பிரதான சுழல் பந்துவீச்சாளர்களில் வருண் சக்கரவர்த்தியை மட்டும் வைத்துக்கொண்டு குல்தீப் யாதவை கம்பீர் நீக்கி இருக்கிறார். இவருடைய இடத்திற்கு பும்ராவுடன் அர்ஸ்தீப் சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம் இந்திய பவுலிங் யூனிட் வலிமை அடைந்திருக்கிறது. இதை ரவிச்சந்திரன் அஸ்வின் பலமுறை வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கோலி, ரோகித்துக்காக பாகிஸ்தானிலிருந்து ஆதரவு குரல்.. கம்பீரை கடுமையாக சாடிய அப்ரிடி

இந்திய பிளேயிங் லெவன்: கில், அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.

- Advertisement -