இந்தியா பாக் போட்டி.. ரோகித் பேட்டிங்கில் செய்த செம்ம சேஞ்ச்.. இனி அடக்கறது கஷ்டம்

0
156
Rohit

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்போது மழையால் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் வீசப்பட்ட ஒரு ஓவரில் ரோகித் சர்மா பேட்டிங்கில் பாகிஸ்தான் பவுலர்களுக்கு எதிராக ஒரு சிறப்பான மாற்றத்தைச் செய்திருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். வானிலை மற்றும் ஆடுகளம் இரண்டுமே வேகப்பந்து வீச்சுக்கு மிக சாதகமாக இருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் முகாம் மிகவும் சந்தோஷம் அடைந்தது.

- Advertisement -

இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மிக முக்கியமாக பலராலும் விமர்சனம் செய்யப்பட்டு வந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆஸம் கான் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் காயம் சரியான சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இமாத் வாசிம் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியை பொறுத்தவரையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. விராட் கோலியை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருகின்ற முடிவையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எடுக்கவில்லை. இந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக வந்தார்கள்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி முதல் ஓவரை வீச, முதல் பந்தை சந்தித்த ரோகித் சர்மா இரண்டு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை தடுத்து விளையாடிய அவர் அடுத்த பந்தில் அபாரமான சிக்ஸர் ஒன்றை ஸ்கொயர் லெக் பகுதியில் அடித்தார். இது பார்த்த எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. அடுத்த மூன்று பந்துகளையும் அடுத்து விளையாடினார். மழை வந்த காரணத்தினால் போட்டியில் நிறுத்தப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : சச்சின் தோனிக்கு கிடையாது.. விராட் கோலிக்கு பாகிஸ்தான்ல வரவேற்பு எப்படி தெரியுமா? – ரஷீத் லத்தீப் பேட்டி

இந்த நிலையில் ரோகித் சர்மா தற்பொழுது பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தன்னுடைய முன் விலக்கி வைத்து ஓபன் ஸ்டாண்ட் எடுத்து நிற்கிறார். இதன் காரணமாக அவர் பந்து உள்ளே வருவதற்கு அனுமதிக்கிறார். இதனால் அவருக்கு விளையாடுவதற்கு அதிக நேரம் கிடைக்கிறது. மேலும் முன் காலை விலக்கி வைத்திருக்கின்ற காரணத்தினால், பந்தை தடுக்கும் பொழுது முன் காலில் பேட் பட்டு சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் எல்பி டபிள்யு முறையில் ஆட்டம் இழக்க செய்வது கடினம். இந்த அற்புதமான பேட்டிங் ஸ்டான்ஸ் மாற்றம் ரோகித் சர்மா பேட்டிங்கில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது!