கம்பீர் இது சரியில்லை.. சர்பராஸ் கானை வைத்து ரொம்ப மோசமான முடிவு – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
50
Sarfaraz

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கானை எட்டாவது இடத்தில் களம் இறக்கியது தொடர்பாக இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது மும்பையில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இறுதி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் கில் மற்றும் ரிஷப் பண்டின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி மீண்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியை மீட்ட கில் மற்றும் பண்ட்

நேற்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்த அணி 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 86 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து திடீரென நெருக்கடியில் சிக்கியது. விராட் கோலி ரன் அவுட் ஆனது இந்திய அணியை அழுத்தத்தில் தள்ளியது.

இந்த நிலையில் இன்று இந்திய அணிக்கு சுப்மன் கில் 90 ரன்கள் மற்றும் ரிஷப் பண்ட் 60 ரன்கள் எடுக்க இந்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 59.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியை விட முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் முன்னிலை பெற்றது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவது இதுவே முதல் முறை.

- Advertisement -

சர்பராஸ் கானை வைத்து எடுத்த முடிவு

கில் உடன் இணைந்து விளையாடி வந்த இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்ததும், இன்னொரு இடதுகை பேட்ஸ்மேனை கொண்டு வருவதற்காக ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணி நிர்வாகம் களம் இறங்கியது. சர்பராஸ் கான் இதனால் எட்டாவது இடத்தில் களமிறங்க வேண்டியதாக இருந்தது. அந்த இடத்தில் களம் இறங்கிய அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : 130 ரன் 5 ஓவர்.. யுஏஇ அபார பேட்டிங்.. இந்திய அணியை வீழ்த்தியது.. ஹாங்காங் சிக்ஸஸ் 2024

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஒரு பையன். தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் தொடரில் மூன்று அரை சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் கடைசியாக பெங்களூர் டெஸ்டில் அவர் சதம் அடித்து 150 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் அவர் தன்னுடைய வழக்கமான இடத்தில் இந்த போட்டியில் களம் இறங்கினார் என்றால் இல்லை. அவரை எட்டாவது இடத்தில் அனுப்பினார்கள். இது மிக மோசமான முடிவு” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -