“இந்திய போட்டிக்கு ரெடி .. 100% கொடுப்போம்” – பாபர் அசாம் பங்களாதேஷ் வெற்றிக்குப் பின் பேட்டி!

0
2108
Babar

நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சுற்று ஏ பிரிவில் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா, பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தகுதி பெற்றன!

இன்று பாகிஸ்தான் லாகூர் மைதானத்தில் ஆசிய கோப்பை இரண்டாவது சுற்று போட்டியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன!

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணியை, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் 38.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு சுருட்டி அசத்தினார்கள். முதல் கட்டத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள், மீண்டும் இறுதிக்கட்டத்தில் திரும்பி வந்து அதிரடியாக பங்களாதேஷ் அணியை முடக்கினார்கள்.

தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இருவரும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இருவரும் 20 மற்றும் 17 ரன்களில் சீக்கிரத்தில் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அரை சதங்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணி இந்திய அணியை பத்தாம் தேதி இலங்கை கொழும்பு மைதானத்தில் சந்திக்கிறது. இந்திய அணி இரண்டாவது சுற்று முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அணி இதே இலங்கை கொழும்பு மைதானத்தில் தனது எஞ்சியுள்ள இரண்டாவது சுற்றின் இரண்டு போட்டிகளையும் 12ஆம் தேதி இலங்கைக்கு எதிராகவும், 15ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் “அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அணியின் எல்லா வீரர்களுக்கும் நன்றி. குறிப்பாக எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் முதல் பத்து ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார்கள்.

இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வரும் ஹாரிஸ் ரவுப் நன்றாக பந்து வீசுகிறார். இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவி இருப்பதை பார்த்தோம். அதன் காரணமாக பகீம் நன்றாக பந்து வீசுவதையும் பார்த்தேன். ஆடுகளத்தில் கொஞ்சம் புல் இருந்ததால் இவரை இந்த ஆட்டத்தில் சேர்க்க நினைத்தோம்.

இங்கு நாங்கள் விளையாடும்போது எப்பொழுதும் கூட்டம் எங்களை அதிக அளவில் ஆதரிக்கிறது. அவர்கள் அனைவரும் இந்த போட்டியை ரசித்து இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தியாவுடன் விளையாடும்போது இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை தரும். பிரஷர் எதுவும் கிடையாது. நாங்கள் எப்பொழுதும் பெரிய போட்டிக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் எங்களுடைய 100 சதவீதத்தை வெளிப்படுத்துவோம்!” என்று கூறியிருக்கிறார்!