3வது டி20 போட்டி: இந்திய அணியில் இரண்டு பெரிய மாற்றங்கள்; பிளேயிங் லெவன் அறிவிப்பு!

0
330

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி இங்கே கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று டி20 போட்டியில் கொண்ட தொடரில் விளையாடுகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்ததாக கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 237 ரன்கள் அடித்து, தென் ஆப்பிரிக்கா அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகளிலும் வலுவான நிலையில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதால் இந்திய அணி நல்ல மனநிலையுடன் மூன்றாவது டி20 போட்டியில் களமிறங்க உள்ளது. இந்தூர் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி இங்கே கணிக்கப்பட்டுள்ளது.

துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் கே எல் ராகுல் இருக்கின்றனர். ஆஸ்திரேலியா டி20 தொடர் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவிற்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. அந்த இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளே எடுத்து வரப்பட இருக்கிறார். அடுத்ததாக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இருக்கின்றனர். அவர்களுக்கு கூடுதலாக போட்டிகள் தேவை என்றும் ரோகித் சர்மா முன்னமே தெரிவித்திருந்தார்.

மேலும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் அக்சர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் விளையாடுவர். கூடுதல் சுழல் பந்துவீச்சாளராக இந்த போட்டியில் சகல் எடுத்து வரப்படலாம். வேகப்பந்துவீச்சில் தீபக் சகர், ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷதீப் சிங் மூவரும் உள்ளனர். அதில் மாற்றமும் இன்றி விளையாடலாம்.

ஒருவேளை ஏதேனும் ஒருவரை மாற்ற வேண்டும் என்றால் ஹர்ஷல் பட்டேல் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜ் உள்ளே எடுத்து வரப்படலாம்.

மூன்றாவது டி20 போட்டியில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணி:

ரோகித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் தீபக் சகர், சகல் ஹர்ஷல் பட்டேல்/சிராஜ், அர்சதீப் சிங்.