இந்தியா-பாக் வீரர்கள் நட்பு.. கவுதம் கம்பீர் கருத்துக்கு ஷாகித் அப்ரிடி பதிலடி.. பரபரப்பாகும் ஆசிய கோப்பை!

0
2509
Gambhir

கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் மோதிக் கொள்கிறது என்றால், அது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதிக் கொள்வதை விட ஒருமடங்கு மேலான உணர்வுரீதியான மதிப்பையும், வணிகரீதியான மதிப்பையும் கொண்டிருக்கும்.

இந்த இரு நாடுகள் உலகில் எந்த மைதானத்தில் மோதிக்கொண்டாலும், அங்கு அந்த மைதானத்தை இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் நிறைப்பார்கள். அந்தப் போட்டியை காண்பதற்காக எவ்வளவு பணம் செலவு செய்வதாக இருந்தாலும் செய்வார்கள்.

- Advertisement -

காரணம், வரலாற்று ரீதியாக இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் உணர்வுபூர்வமான விஷயங்கள் அப்படியானது. மேலும் இரு நாடுகளும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தனிப்பட்ட முறையில் எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. ஐசிசி மற்றும் ஏசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரண்டு நாடுகளும் விளையாடி வருகின்றன.

ஒரு உலகக்கோப்பை தொடர் என்றாலும், அந்தத் தொடரில் மிக முக்கியமான போட்டி இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியாக இருக்கும் போது, இரு நாடுகளும் கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் விளையாடாவிட்டால், இருநாட்டு ரசிகர்களுக்கும் அந்த நாடுகள் மோதிக் கொள்ளும் போட்டி குறித்தான எதிர்பார்ப்பு எந்த அளவில் இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் இருநாட்டு வீரர்களின் நட்பிலும் பெரிய முன்னேற்றம் காணப்படுகிறது. களத்துக்கு வெளியே காணப்படும் நட்பு களத்துக்கு உள்ளேயும் காணப்படுகிறது. இதுகுறித்து பேசி இருந்த இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “தேசிய அணிக்காக விளையாடும் பொழுது களத்திற்குள்ளே நட்பு என்பதற்கு இடம் கிடையாது. அங்கு இரு அணி வீரர்களின் கண்களிலும் நெருப்பு இருக்க வேண்டும். ஆக்ரோஷம் இருக்க வேண்டும்.

- Advertisement -

ஏனென்றால் நாம் கோடிக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக விளையாடுகிறோம். போட்டி முடிவுக்கு பின் நட்பு பாராட்டுவது தனி. இந்த காலம் போல் எங்கள் காலத்தில் களத்திற்குள் நட்பு கிடையாது!” என்று கூறியிருந்தார்!

கம்பீர் கூறியது குறித்து ஷாகித் அப்ரிடி இடம் கேட்கப்பட்ட பொழுது “வீரர்கள் களத்திற்குள்ளே நட்புடன் இருப்பது மிகவும் நல்ல விஷயம். நான் இதை எப்பொழுதும் நேர்மறையான விஷயமாகவே பார்க்கிறேன். நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் என்பதை தாண்டி இருநாடுகளின் தூதுவர்கள். கிரிக்கெட் மூலமாக மட்டுமே இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான உறவை மேம்படுத்த முடியும். தனிப்பட்ட அரசியலில் இருந்து விலகி இருக்கவும் முடியும்.

கம்பீர் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட பார்வை. நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தூதுவர்கள். எங்களுக்கு எல்லைகள் தாண்டி எங்களுடைய நலம் விரும்பிகள் இருக்கிறார்கள். அன்பின் செய்தியை பரப்புவது நல்லது. ஆக்ரோஷமும் நல்லதுதான் ஆனால் களத்திற்கு வெளியேவும் வாழ்க்கை இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!