ரிசர்வ் டேவுக்கு செல்லும் இந்தியா-பாக் போட்டி.. நாளை எத்தனை ஓவர்களுக்கு விளையாடப்படும்?.. முழு விபரங்கள்!

0
11790
ICT

நடப்பு ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சுற்றில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட இன்றைய போட்டி மழையின் காரணமாக முழுவதுமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது!

இன்றைய போட்டியில் முதலில் டாசில் வென்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்த 8 பந்துகளில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். மேற்கொண்டு விராட் கோலி மற்றும் இந்த போட்டிக்கு அணிக்கு மீண்டும் வந்த கே.எல்.ராகுல் இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள்.

இந்திய அணி 24.1 ஓவரில் 147 ரன்கள் இரண்டு விக்கெட் இழப்புக்கு எடுத்திருந்த பொழுது, திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மைதான ஊழியர்கள் மைதானத்தை மூடுவதற்கான நேரம் கூட, திடீரென பெய்த மழையால் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மழை சீக்கரத்தில் நின்று இருந்தாலும் கூட, மைதானத்தில் தண்ணீர் தேங்கி ஈரமாக இருந்த காரணத்தினால், வீரர்களுக்கு ஆபத்து என்பதால் கள நடுவர்கள் தொடர்ந்து மைதானத்தை பரிசோதித்து வந்தார்கள்.

- Advertisement -

மேற்கொண்டு 9:00 மணிக்கு போட்டியை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள். இந்த நிலையில் மீண்டும் 8:30 மணிக்கு மேல் மழை பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக போட்டி தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால், இந்த போட்டி நாளை தொடர்ந்து நடைபெறும். அதாவது இந்த போட்டிக்கு புதிதாக டாஸ் போடப்படாது. மேலும் இந்திய அணி முதல் ஓவரில் இருந்து ஆரம்பிக்காது. தற்பொழுது என்ன ஓவரில் எத்தனை விக்கெட் இழந்து, எத்தனை ரன்கள் எடுக்கப்பட்டிருக்கிறதோ, அதே இடத்தில் இருந்து நாளை போட்டி ஆரம்பிக்கும்.

நாளை இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் விட்ட இடத்தில் இருந்து வந்து மீண்டும் தொடர்வார்கள். இந்திய அணி மேற்கொண்டு 25.5 ஓவர்கள் மழை குறுக்கீடு இல்லை என்றால் விளையாடி, மொத்தம் 50 ஓவராக முடிக்கும். அதைத்தொடர்ந்து 50 ஓவர்கள் பாகிஸ்தான் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது!