இந்தியாவா அல்லது சிஎஸ்கேவா.?.. தோனி கொடுத்த தரமான பதில்.. வாயடைத்துப் போன நிருபர்.!

0
24296

இந்திய அணிக்காக இரண்டு முறை உலக கோப்பையை வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவரது தலைமையிலான இந்திய அணி முதல் ஐசிசி t20 உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி அவர் கேப்டனாக பணியாற்றிய காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை பெற்றதோடு ஒரு நாள் போட்டிகளிலும் வெளிநாட்டு மைதானங்களில் வெற்றி பெற்றது. மேலும் கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார் தோனி.

- Advertisement -

இவரது தலைமையிலான சிஎஸ்கே இந்த வருட ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் என்று சாதனை படைத்தனர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்தனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரது தலைமையில் 2010 மற்றும் 2014 ஆம் வருடங்களில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

எப்போதாவது அரிதாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மகேந்திர சிங் தோனி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்து பேசியிருந்தார் அவர். அப்போது ரசிகர் ஒருவர் இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணி இடையே பிடித்த அணி எது என தேர்வு செய்யுமாறு மறைமுகமாக கேட்டார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய அந்த ரசிகர் “நீலம் மற்றும் மஞ்சள் இடையே ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்” என எம்எஸ் தோனியிடம் கேட்டார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மகேந்திர சிங் தோனி” நான் நூறு சதவீதம் நீலத்தை ஆதரிப்பேன். எனக்குத் தெரியும் மஞ்சளை நேசிக்கும் மக்கள் ஒரு போதும் நீலத்தின் மீதான நேசத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்” என பதிலளித்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எம்எஸ் தோனி தேசத்தின் மீது மிகுந்த அக்கறையும் பாசமும் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இப்போது அவரது மகன் பிறந்த போதும் இந்தியாவிற்கு மகளை பார்க்க வராமல் தேசத்திற்கான கடமை இருக்கிறது அதை முடித்துவிட்டு தான் தனிப்பட்ட வேலைகள் எல்லாம் என கூடியவர் எம்எஸ்.தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது அடுத்த வருட ஐபிஎல் போட்டிகளில் தான் பங்கிற்கு இருப்பதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் எம்எஸ் தோனி. அது குறித்து பேசிய அவர் நவம்பர் மாதத்திற்குள் முழு உடல் தகுதியை பெற்று விடுவேன் என தெரிவித்திருக்கிறார். நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் மூட்டில் போது அவருக்கு மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் தோனி. தற்போது அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்து உடல் தகுதியையும் பெற்று விட்டேன் என்று அறிவித்திருப்பதால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை வழிநடத்த இருப்பது உறுதியாக இருக்கிறது.

மேலும் அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது தோனிக்கு பிடித்த இந்திய மைதானம் எது என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய மகேந்திர சிங் தோனி இது ஒரு கடினமான கேள்வி என்றும் இதற்கு பதில் அளிப்பது சற்று கடினமானது எனவும் தெரிவித்தார். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருவதால் சென்னை சேப்பாக்கம் மைதானம் தனக்கு மிகவும் பிடித்த மைதானம் என தெரிவித்தார். மற்ற அணிகள் போல் இல்லாமல் சில பிரச்சினைகளின் காரணமாக சென்னை அணி சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் குறைவான போட்டிகளிலேயே விளையாடி இருக்கிறது. எனினும் சென்னை மக்களின் அன்பு ஸ்பெஷல் என குறிப்பிட்ட அவர் இந்தப் பதினைந்து வருடங்களில் ஏழு அல்லது எட்டு வருடங்கள் மட்டுமே சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி இருந்தாலும் அது தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு மைதானம் எனக் குறிப்பிட்டார்.