நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 150 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அபிஷேக்சர்மா அதிரடியாக விளையாடிய விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா முதல் பந்திலிருந்து இங்கிலாந்து பவுலர்களை தண்டிக்க ஆரம்பித்தார். 17 பந்துகளில் அரை சத்தை கடந்த அவர், 37 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். வெறும் 54 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸ் என 135 ரன்கள் குவித்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் அதில் ரசித் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது.
அதற்கு அடுத்ததாக களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் மட்டுமே ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட, மற்ற வீரர்கள் அனைவரும் வழக்கம் போல சுழற் பந்துவீச்சுக்கு நடயைக் கட்ட ஆரம்பித்தனர். மேலும் பந்து வீச்சிலும் கலக்கிய அபிஷேக் ஷர்மா ஒரே ஓவரில் மூன்று ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்துவீச்சாளர் சமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவிபாஜி என்னிடம் இதைதான் விரும்புவார்
ஆட்டநாயகன் விருது பெற்ற அபிஷேக் ஷர்மா பேசும் போது “இந்த தருணம் சிறப்பு வாய்ந்தது நாட்டுக்காக விளையாடுவது என்பது எப்போதுமே சிறப்பான விஷயமாகும். இதை நான் முன்பே சொல்லி இருக்கிறேன் இது எனது நாள் என்று பார்க்கும்போது முதல் பந்தில் இருந்து எனது அதிரடியை துவங்க ஆரம்பிப்பேன். எப்போதும் என்னை ஆதரித்தனர் அது எனக்கு சிறப்பான விஷயம். எதிரணி பந்துவீச்சாளர்கள் 140-150 ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் போது நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு நொடி முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க:133 ரன் 74 பந்து.. எம்ஐ அபார பேட்டிங்.. முன்னாள் ஆர்சிபி வீரர் ஏமாற்றம்.. 95 ரன் வித்தியாசத்தில் கேப்பிட்டல்ஸ் தோல்வி எஸ்ஏ டி20
பந்திற்க்கு விரைவாக ரியாக்ட் செய்யவும், எனது ஷாட்களை விளையாட விரும்பினேன். ஆர்ச்சர் மாதிரியான உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளரை கவர் திசையில் அடிக்கும் போது அது எப்போதுமே ஒரு சிறப்பான ஷாட். மேலும் ரசித் கான் வீசிய பந்தில் ஸ்ட்ரைட் டிரைவ் விளையாடியது யுவி பாஜி குறிப்பிட்டு பேசிய ஷாட் அது. அவர் எப்போதுமே 15 முதல் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புவார். கௌதி பாஜி கூட அதையே விரும்பினார். இன்று எனது நாளாக இருந்ததில் மகிழ்ச்சி சிறப்பாக விளையாடினேன்” என்று கூறியிருக்கிறார்.