இந்தியாவுக்கு கிடைச்ச புது ஸ்பான்சர்.. ஒரு மேட்ச்க்கு இவ்வளவு கோடியா? ஆச்சரியமான தகவல்கள் இதோ!

0
494
BCCI

கடந்த வருடங்களில் இந்தியாவில் நடைபெற்ற உள்நாட்டு போட்டிகள் மற்றும், இரு நாடுகளுக்கு இடையேயான சர்வதேச போட்டிகளுக்கான தொடர் பேடிஎம் தொடர் இன்று அழைக்கப்பட்டு வந்ததை நாம் பார்த்திருப்போம். இப்படி ஒரு தொடருக்கு தங்களுடைய நிறுவனத்தின் பெயரை கொண்டு இருப்பதற்குத்தான் டைட்டில் ஸ்பான்சர் என்று பெயர்!

ஒரு வருடத்திற்கு முன்பு உள்நாட்டில் நடைபெறும் இந்திய அணி பங்குபெறும் சர்வதேச தொடர், மற்றும் உள்நாட்டு தொடர்களுக்கு டைட்டில் ஸ்பான்சர் ஆக பேடிஎம் இருந்தது. இந்த நிறுவனம் உள்நாட்டில் நடைபெறும் இந்திய அணியின் சர்வதேச ஒரு போட்டிக்கு 2.4 கோடி ரூபாய் வழங்கி வந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து மேலும் ஒரு வருடம் இருக்கும் பொழுதே பேடிஎம் டைட்டில் ஸ்பான்சர் ஷிப்பிலிருந்து விலகிக் கொண்டது. இதற்கு அடுத்து மாஸ்டர் கார்டு டைட்டில் ஸ்பான்சர் ஆக வந்தது. இந்த நிறுவனம் உள்நாட்டில் இந்திய அணி விளையாடும் சர்வதேச தொடரில் ஒரு போட்டிக்கு 3.8 கோடி ரூபாய் கொடுத்தது.

தற்பொழுது டைட்டில் ஸ்பான்சர்கான காலம் முடிந்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்சர் யார் என்பதற்கான ஏலம் தற்பொழுது நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய ஒரு நிறுவனம் இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சர் ஆக வந்திருக்கிறது. மேலும் உள்நாட்டுப் போட்டிகளுக்கும் இதே நிறுவனம் டைட்டில் ஸ்பான்சர் ஆக தொடரும்.

இந்திய சர்வதேச கிரிக்கெட் அணிக்கு டைட்டில் ஸ்பான்சராக இருப்பதைவிட, ஐபிஎல் தொடரில் ஸ்பான்ஸர்களாக இருப்பதற்கே நிறைய நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதால், இந்திய கிரிக்கெட் வாரியம் ஏலத்திற்கான குறைந்தபட்ச தொகையை போட்டிக்கு 2.4 கோடி என்று குறைத்துக் கொண்டது.

- Advertisement -

இது தற்பொழுது நடைபெற்ற ஏலத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஏலத்திற்கு சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் இரண்டு நிறுவனங்கள் வந்தன. இதில் ஏலத்தில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் நிறுவனம் வெற்றி பெற்று, இந்தியாவில் நடைபெறும் இந்தியா அணி பங்குபெறும் சர்வதேச போட்டி மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சராக மாறியிருக்கிறது.

இந்த நிறுவனம் ஒரு போட்டிக்கு 4.2 கோடி ரூபாய் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு செலுத்தும். இந்த ஒப்பந்தம் மொத்தம் மூன்று ஆண்டுகள். இதில் மொத்தம் 56 சர்வதேச போட்டிகள் உள்நாட்டில் நடக்க இருக்கின்றன. இதன் மூலம் இந்த மூன்று ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மொத்தமாக டைட்டில் ஸ்பான்சர் மூலமாக
987.84 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இந்த ஏலம் குறித்து பேசி உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி “ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் நாங்கள் உள்நாட்டில் விளையாடும் டைட்டில் ஸ்பான்சர் ஆக இருப்பதற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு பார்வையும் கிரிக்கெட்டின் உணர்வோடு எதிரொலிக்கிறது. மேலும் கிரிக்கெட்டுக்கும் அதன் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களுக்கும் பயனளிக்கும் வெற்றிகரமான ஒத்துழைப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!